காசாவில் குண்டு மழை.. மீண்டும் தொற்றிய போர் பதற்றம்.. பிஞ்சு குழந்தைகள் உடல் கருகி பலியான சோகம்..!
இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவில் கோலோச்சும் ஹமாஸ் படைகளுக்கும் இடையான யுத்தம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. 2023 இறுதியில் துவங்கிய இரு தரப்பு சண்டையில், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ஹமாஸ் படை, அவ்வப்போது, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் மீது குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. தவிர, இஸ்ரேல் நாட்டினரை கடத்தி சென்று அவர்களை பணைய கைதிகளாகவும் பயன்படுத்தி வருகிறது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் ஹமாஸ் படையை ஒழித்துக்கட்டும் வரை ஓயப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நாதன்யாகு சபதம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து காசாவை நோக்கி இஸ்ரேலின் ஏவுகணைகள் பாயத்துவங்கின.
இதையும் படிங்க: இந்தியா எங்க சகோதரன்..! பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு.. கொக்காரிக்கும் இஸ்ரேல் வீராங்கனைகள்..!
தொடர்ந்து காசாவில் ஹமாஸ் படையினருடன், அங்கிருந்து அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இது சர்வதேச அளவில் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இதையடுத்து, ஹமாஸ் படையை சேராத பொதுமக்கள் காசாவில் வெளியேற நெதன்யாகு அவகாசம் வழங்கினார். அவ்வப்போது போர் நிறுத்தம் அறிவித்து, மக்களை வெளியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த சில நாட்களாக இரு தரப்பு சண்டை ஓய்ந்திருந்த நிலயைில், தற்போது இஸ்ரேல் படைகள் காசாவில் மீண்டும் தாக்குதலை துவங்கியுள்ளன. காசாவில் உள்ள ஹமாஸ் படையினரை தீர்த்துக்கட்டும் வகையில் நடத்தப்பட்ட இஸ்ரேல் ராணுவ தாக்குதலில், 84-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், காசாவில் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. காசா மீதான தாக்குதலை நிறுத்த வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் பிரதமர் கூறிய 24 மணி நேரத்திற்குள் அந்நாட்டு ராணுவம் தன் வேலையை காட்டியுள்ளது.
பதிலுக்கு ஹாமாஸ் படையும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதால், இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர், சிரியாவில் உள்நாட்டு கிளர்ச்சி, இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் என அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் போர் மீண்டும் துளிர்விட்டுள்ளது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உணவுக்காக கையேந்தும் நிலைமை..! பசி, பட்டினியால் தவிக்கும் காஸா மக்கள்..!