×
 

இபிஎஸ் தெம்பா இருக்காரு..! நல்லாட்சி கொடுப்பாரு..! பொள்ளாச்சி ஜெயராமன் நம்பிக்கை..!

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார் என பொள்ளாச்சி ஜெயராமன் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் தமிழக அரசியலை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து சுமார் 108 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை இல்லாத ஹங் அசெம்பிளி நிலை உருவாகியுள்ளது.

இந்தச் சூழலில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற வதந்திகள் கடந்த சில நாட்களாக தீவிரமாகப் பரவி வருகின்றன. இது தமிழக அரசியலின் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத ஒரு பெரும் திருப்பமாகக் கருதப்படுகிறது. 

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு வேண்டினார். ஆனால், போதுமான ஆதரவுக் கடிதங்கள் இல்லை என்று ஆளுநர் கூறியதாகத் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்த நிலையில், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தாத சூழலில், அதிமுக தரப்பில் இருந்து திமுகவுடன் தொடர்பு கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகத் தொடங்கின. 

இதையும் படிங்க: மீண்டும் எடப்பாடியார் ஆட்சி..! நல்லதே நடக்கும்… தம்பிதுரை நம்பிக்கை..!

அதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தெம்பாக இருக்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். தங்களுக்கும் அவர் தெம்பு ஊட்டி வருவதாக கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் தமிழகத்திற்கு நல்லாட்சி தருவார் என்றும் எதிர்காலத்தில் அவர் ஆட்சி அமைப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 

இதையும் படிங்க: "விஜய்"..! ஒத்த ஆள எதிர்த்து ஒரே நைட்ல ஒன்னாகிட்டாங்க..! மாணிக்கம் தாகூர் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share