களேபரமான உட்கட்சி பிரச்சனை..! அதிமுக மா. செ. கூட்டம்..! EPS-க்கு அவைத் தலைவர் ஆதரவு..!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுத்த தோல்விக்குப் பின்னர், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்டுள்ள சில உள்கட்சி பதற்றங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பல மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தின் போது அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ் மகன் ஹுசைன் கலந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமிக்கு தனது முழு ஆதரவை தெரிவித்தார். இது கட்சியின் மேல் தலைமைக்கு ஒற்றுமை நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. வேலுமணி தரப்பு பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அதிமுக பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் படைத்த அவை தலைவர் தமிழ் மகன் உசைன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: 25 MLAக்களும் கம்முனு இருந்திருந்தா எலெக்ஷன் வந்திருக்கும்..! அதிமுக EX. அமைச்சர் ஆவேசம்..!
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள், புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனங்கள் உள்ளிட்ட பின்னணியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கட்சியை மீட்டெடுக்கும் முயற்சிகளில் இது ஒரு முக்கிய அடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் தவெக குதிரை பேர வியாபாரம் நடத்தியது! எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு!