×
 

வழக்கம்போல் LIVE CUT..! திமுக மிரண்டு போய் இருக்கு..! அதிமுக கடும் விமர்சனம்..!

வழக்கம்போல் திராணியற்ற திமுக அரசு நேரலையை துண்டித்ததாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2026 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை சென்னையில் தொடங்கியது. இது ஆண்டின் தொடக்க கூட்டமாக இருந்ததால், மரபுப்படி ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் உரையாற்ற வேண்டியிருந்தது. ஆனால், கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த பிறகு, ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது, தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி அவர் ஆட்சேபனை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அரசு தயாரித்த உரையில் பல தவறான, ஆதாரமற்ற தகவல்கள் உள்ளதாகவும், அது தவறானவை என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்நிலையில், ஆளுநர் பேச முயன்றபோது அவரது மைக் பலமுறை அணைக்கப்பட்டதாகவும், அவரைப் பேச அனுமதிக்கவில்லை என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதனால், ஆளுநர் "நான் அவமதிக்கப்பட்டுள்ளேன்" என்று கூறி, உரையை முழுமையாக வாசிக்காமலேயே சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். இது தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக ஆளுநர் உரையைப் புறக்கணித்த சம்பவமாக அமைந்தது.

கடந்த ஆண்டுகளில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கலைஞர் போன்ற பெயர்களைத் தவிர்த்தது, மதச்சார்பின்மை என்ற வார்த்தையை வாசிக்க மறுத்தது போன்ற சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், உரையில் தவறான தகவல்கள் உள்ளதாகவும், தலித்கள் மீதான வன்முறை, தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை போன்றவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. மைக் அணைக்கப்பட்டதால் ஆளுநருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனிடையே, வழக்கம்போல் பேரவை நேரலையை திறாணியற்ற திமுக அரசு துண்டித்திருக்கிறது என அதிமுக விமர்சித்துள்ளது. பெருகிவரும் அதிமுக மீதான மக்களின் நம்பிக்கை, ஸ்டாலின் அரசை அவ்வளவு தூரம் மிரள வைத்திருக்கிறது என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க: ஆளுநர் மைக் OFF? திட்டமிட்ட வேலை..! அவ்வளவும் பச்சை பொய்... அமைச்சர் ரகுபதி விளாசல்..!

ஆளுநரை அவமானப்படுத்துவதன் மூலமும் புறக்கணிப்பதன் மூலமும் அரசியல் செய்து தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மடைமாற்றி விடலாம் என நினைக்கும் திமுக அரசு, தமிழ்நாட்டின் தற்போதைய முக்கியப் பிரச்சனைகளான பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம், தலித்களுக்கு எதிரான அட்டூழியங்கள் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு தங்கள் அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கும்படி ஆளுநர் உரையின் மூலமாக அவரை நிர்பந்தித்திருப்பது எத்தகைய போலித்தனம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நேரலையை வேண்டுமானால் இந்த ஆட்சியாளர்கள் துண்டிக்க முடியுமே தவிர, அனைத்து துறைகளிலும் தோல்வியுற்றுள்ள இந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் அலையை இவர்கள் என்ன செய்துவிட முடியும் என்று சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளது. 

இதையும் படிங்க: போக்சோ வழக்கு... சட்டம் ஒழுங்கு சீர்கேடு..! சட்டசபை வளாகத்தில் இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share