×
 

இபிஎஸ் எங்க தொகுதியில தான் போட்டியிடனும்... அதிமுகவில் 10 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிப்பு...!

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 10,175 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலை பாஜக கூட்டணியுடன் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். கட்சியின் அமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோயம்புத்தூரில் ஜூலை 7ஆம் தேதி தொடங்கிய சுற்றுப்பயணத்தை தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரை நிகழ்த்துவது உடன் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

அப்போது, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் உறுதியளித்தார்.தமிழ்நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக தேர்தல் சுற்றுப்பயணத்தை முடித்தார். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் சட்டமன்ற பொது தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மும்முறமாக செய்து வருகின்றன. மக்கள் சந்திப்பு, பொதுக் கூட்டங்கள், செயற்குழு கூட்டங்கள் என முனைப்பு காட்டி வருகின்றன. கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையும் படிங்க: போலி வாக்குறுதி முதல்வருக்கு புத்தாண்டு வாழ்த்து... அதிமுக கடும் விமர்சனம்...!

2026 ஆம் ஆண்டு ஆட்சி அரியணையில் ஏறுவதை உறுதி செய்வதற்காக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால வரம்பை அதிமுக அறிவித்தது. இதனிடையே, தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் கேரளாவில் 7, 988 விருப்பமுனைகள் பெறப்பட்டுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

மொத்தமாக அதிமுக சார்பில் பெறப்பட்ட விருப்ப மனுக்களின் எண்ணிக்கை 10,175 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 2187 பேர் மனு கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டி தொண்டர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் 7988 பேர் விருப்பமான கொடுத்துள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: HAPPY NEW YEAR தலைவரே... இபிஎஸ்-க்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல படையெடுத்த அதிமுக நிர்வாகிகள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share