அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்... முழு விவரம்...!
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களின் முழு விவரத்தை பார்க்கலாம்.
சென்னையின் வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வரு வெங்கடஜலபதி அரண்மனை மஹால், இன்று அதிகாலை முதல் அரசியல் ஆரவாரத்தால் நிரம்பியுள்ளது. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் பதினாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் முழு விவரத்தை பார்க்கலாம்.
1)2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2)கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
3)நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4)கோவை மற்றும் மதுரை மெட்ரோ விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முறையான தரவுகளுடன் மெட்ரோவிற்கு விண்ணப்பிக்கவில்லை என அதிமுக பொது குழுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கூட்டணி முடிவெடுக்க இபிஎஸ்- க்கே முழு அதிகாரம்... பொதுக்குழுவில் முக்கிய தீர்மானம்...!
5) வடகிழக்கு பருவமழையின் போது மக்களை காக்க தவறிவிட்டதாக திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
6)திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதித்துறையின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
7)கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட், கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலையை 150 ஆக உயர்த்துவது போன்று வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
8)எல்லோருக்கும் எல்லாம் என ஆசை காட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி வருவதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
9) மேல் முறையீடு என்ற பெயரில் மக்கள் வரைபடம் வீணடிக்கப்படுவதாகவும் அதிமுக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10) சிறுமிகள் மற்றும் வயதான பெண்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையை கையில் வைத்துள்ள பொம்மை முதல்வர் ஸ்டாலின் நிர்வாகத் திறனற்ற போக்குக்கு கண்டனம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
11) பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசுக்கு கண்டனம்.
12) திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முறையாக இல்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
13) கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும் அஞ்சலி செலுத்தி அதிமுக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
14) ஊழல் சாம்ராஜ்யமாக மாறிய திமுக அரசுக்கு கண்டனம் என மதுரை மாநகராட்சி ஊழலை குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
15) நீதித்துறை சுயமாக செயல்பட வேண்டும் என்றும் அதன் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் எனவும் அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட வேண்டும் என்றால் ஆட்சியாளர்கள் தலைகளை இருக்கக் கூடாது என்றும் நாட்டின் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
16) அதிமுக எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களின் வழியில் செயல்பட்டு அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராக திகழ்ந்துவரும் எடப்பாடி பழனிச்சாமி 2026 இல் மீண்டும் முதலமைச்சராக்குவோம் என்று சூளுரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவிற்கே சவால்... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவை கண்டித்து தீர்மானம்...!