×
 

தப்புண்ணே, பெரிய தப்பு... பாஜக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு நடந்த அவமானம்... நயினார் கண் முன்பே நடந்த மோசமான சம்பவம்...!

நாகேந்திரன் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அவமதிக்கும் வகையில் குட்கா பாக்கெட் நபர் ஒருவர் தூக்கி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக அவருக்கு பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குறிப்பாக பாஜகவினர் அவர் வாகன பிரச்சாரம் மேற்கொள்ளும் பகுதிக்கு சற்று தூரத்தில் இருந்து நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக மலர் தூவ அழைத்து வந்து நயினார் நாகேந்திரனை உற்சாகப்படுத்தினர். மேலும் அங்கு வந்திருந்த கூட்டத்தினர் கலையாமல் இருக்க பாஜகவினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

பிரச்சாரத்தில் நயினார் நாகேந்திரன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரை அருகே வைத்துக்கொண்டு பரப்புரை மேற்கொண்ட நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் காலியான குட்கா பாக்கெட்டை கையில் எடுத்து மேலே காட்டி "குட்கா குட்கா " என்று கூற விஜயபாஸ்கரின் முகம் மாறியதால் உடனடியாக அருகே இருந்தவர்கள் அவ்வாறு செய்யக்கூடாது. "தப்பு அண்ணே தப்பு அண்ணே" என்று கூறி அவரது கையை பிடித்து இறக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தட்டித் தூக்குறோம்... 501 கிலோ லட்டு ரெடி... பீகாரில் தரமான சம்பவத்திற்கு தயாராகும் பாஜக...!

குட்கா வழக்கு:

கடந்த அதிமுக ஆட்சியின் போது, தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் குடுத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட புகாரை டெல்லி சிபிஐ காவல் துறை கையில் எடுத்தது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், ஒன்றிய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ணன், சுகாதரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே உள்ள 6 பேருடன் கூடுதலாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, விஜயபாஸ்ககர், சென்னை காவல்துறை முன்னாள் காவல் ஆணையாளர் ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கேராஜேந்திரன், வணிகவரித்துறை இணை ஆணையராக பதவிவகித்த வி.எஸ்.குறிஞ்சி செல்வன் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்.பி.எம்.எல்.ஏ-க்கள் மீதான குற்றவழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கஞ்சா, மெத்தபட்டமென் , மதுபானம் போன்ற போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும், இதனால் தமிழ்நாடு சீரழிந்து வருவதாகவும் திமுகவை நயினார் நாகேந்திரன் விளாசிக் கொண்டிருந்த போது, அவருடைய கூட்டணி கட்சியான அதிமுக ஆட்சியில் நடந்த குட்கா முறைகேட்டை நியாபகப்படுத்தும் வகையில் சாமானியர் ஒருவர் நடந்து கொண்டது அதிமுக, பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது.

இதையும் படிங்க: " பிரதமர் மோடிக்கு முன்னாடி நீயெல்லாம் ஒரு ஆளே இல்ல..." விஜயை மறைமுகமாக விளாசிய நயினார் நாகேந்திரன் ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share