உலகின் 5வது பெரிய நிறுவனம்..!! அமேசானையே முந்தி சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்..!!
பங்கு விலை அதிகரிப்பால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் வேகமாக உயர்ந்தது.
உலகப் பொருளாதாரத்தை அதிர வைத்த ஒரு முக்கிய நிகழ்வாக, எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் அறிமுகமாகி மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனம், உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமேசானை மீறி உலகின் ஐந்தாவது மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்துள்ளது. இந்த சாதனை எலான் மஸ்க்கின் தொழில்முனைவோர் பயணத்துக்கு புதிய உச்சத்தை அளித்துள்ளது.
நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ், சுமார் 750 பில்லியன் டாலர் (தோராயமாக 7,500 கோடி டாலர்) மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) அறிவித்தது. ஒரு பங்கின் ஆரம்ப விலை 135 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், வர்த்தகம் தொடங்கிய முதல் நாளிலேயே 21 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. இதன் விளைவாக நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2.15 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. இந்த அதிரடி உயர்வு மூலம் எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக (1 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பு) உருவெடுத்தார். இது சுமார் 100 லட்சம் கோடி ரூபாய்க்கு சமம்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்கெனவே ஸ்டார்லிங் செயற்கைக்கோள் திட்டம், ரீயுசபிள் ராக்கெட் தொழில்நுட்பம், நாசாவுடனான ஒப்பந்தங்கள் மற்றும் மார்ஸ் காலனித்துவத் திட்டம் ஆகியவற்றின் மூலம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. இப்போது பங்குச் சந்தை நுழைவு மூலம் பொதுமக்களும் இந்த வளர்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் வலுவான காலடி எடுத்து வைக்கும் விதமாக ஸ்பேஸ் எக்ஸ், கர்சர் (Cursor) என்ற AI ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை 60 பில்லியன் டாலர் மதிப்பில் கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப திறன்களை மேலும் விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவைக்கு தடை? பாதுகாப்பு காரணங்களை முன்வைக்கும் மத்திய அரசு!
டெஸ்லா, எக்ஸ் (முன்பு ட்விட்டர்) உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைவரான மஸ்க், இந்த சாதனையின் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் தனது முதலிடத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். பங்கு விலை உயர்வால் அவரது சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி உலகப் பொருளாதாரத்திலும், விண்வெளி மற்றும் AI துறைகளிலும் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். ஸ்பேஸ் எக்ஸ் பங்குகளின் எதிர்கால வளர்ச்சி மீது முதலீட்டாளர்கள் அதிக நம்பிக்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டா பயன்படுத்துவதில் தவறில்லை! எலான் மஸ்க்கை உதாரணம் காட்டி தவெக அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவு!