7 போரை நிறுத்திருக்கேன்! எனக்கு நோபல் பரிசு கொடுக்கணும்... ஆசையை வெளிப்படுத்திய டிரம்ப்...!
இதுவரை 7 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்த தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக இருக்கும் டொனால்ட் ஜான் டிரம்ப், உலக அரங்கில் ஒரு தனித்துவமான சக்தியாகத் திகழ்கிறார். 1946 ஜூன் 14 அன்று நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் பிறந்த இவர், தனது வாழ்க்கையை ஒரு அசாதாரண வெற்றிக் கதையாக மாற்றியவர். அவரது தந்தை ஃப்ரெட் டிரம்ப், வெற்றிகரமான ரியல் எஸ்டேட் வணிகர் என்பதால், டிரம்ப் சிறு வயதிலிருந்தே வணிக உலகின் ரகசியங்களை கற்றுக்கொண்டார்.
2015இல் அரசியலுக்கு நுழைந்த டிரம்ப், அமெரிக்கா கிரேட் அகெயின் என்ற முழக்கத்துடன் 2016 தேர்தலில் வெற்றி பெற்று, 45வது அதிபரானார். அவரது ஆட்சியில் வரி குறைப்புகள், வணிக விதிமுறைகள் குறைப்பு, NAFTA ஒப்பந்தத்தை USMCA ஆக மாற்றுதல், ISIS அமைப்பை அழித்தல் மற்றும் இஸ்ரேல்-அரபு அமைதி ஒப்பந்தங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இருப்பினும், இரண்டு முறை ஊழல் விசாரணை மற்றும் ஜனவரி 6, 2021 கேபிடால் தாக்குதல் போன்ற சர்ச்சைகள் அவரது முதல் காலத்தை சவாலாக்கின.
2020 தேர்தலில் தோல்வியடைந்தாலும், 2024இல் கமலா ஹாரிஸை வீழ்த்தி, 312 மின்னணு வாக்குகளுடன் மீண்டும் வெற்றி பெற்று, ஜனவரி 20, 2025 அன்று 47வது அதிபராக பதவியேற்றார்.
இதையும் படிங்க: அப்போ டிக் டாக் புடிக்கல.. இப்ப புடிக்குதாம்.. அந்தர்பல்டி அடித்த அதிபர் டிரம்ப்..!!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தானே நிறுத்தியதாக டிரம்ப் கூறி வருகிறார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற சண்டையை நிறுத்துவதில் யாருடைய தலையெடும் இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேசி உள்ளார். இதுவரை 7 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்த தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: UK-வில் அவமானப்பட்ட டிரம்ப்.. வின்ட்சர் கோட்டையில் ட்ரம்ப்-எப்ஸ்டீன் படங்கள்..!!