×
 

பாக்., துருக்கி ட்ரோன்களை அழித்த இந்தியாவின் D4 கருவி.. வியந்துபோன அமெரிக்க போர் நிபுணர்.!!

பாகிஸ்தான், உக்ரைன் ட்ரோன்களை முடக்கிய இந்திய தயாரிப்பு டி4 கருவிக்கு அமெரிக்காவின போர் நிபுணர் ஜான் ஸ்பென்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், உக்ரைன் ட்ரோன்களை முடக்கிய இந்திய தயாரிப்பு டி4 கருவிக்கு அமெரிக்காவின போர் நிபுணர் ஜான் ஸ்பென்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

எதிரி நாட்டு ட்ரோன்களை முடக்கி செயலிழக்கச் செய்வதற்காக டி4 என்கிற கருவியை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கியது. இதில் எலெக்ட்ரானிக் ஜாமர்கள், லேசர் கருவிகள் எதிரி நாட்டு ட்ரோன்களை கண்டுபிடித்து முடக்கும். இவற்றை பெல் நிறுவனம் தயாரித்தது. இந்த டி4 கருவியைன்ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவம் பயன்படுத்தியது. இது வெற்றிகரமாக செயல்பட்டது. பாகிஸ்தான் மற்றும் துருக்கியின் சிறிய ரக ட்ரோன்களை முடக்கியது.

இது தொடர்பாக ரவி ரஞ்சன் என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவின் டி4 என்கிற ட்ரோன் தடுப்பு கருவி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இது வெற்றிகரமாக செயல்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டி4, போர்களத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி, எதிரிகளை அச்சமடையச் செய்தது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: நல்லெண்ண எம்.பி.க்கள் குழு.. மலிவான அரசியல் விளையாட்டில் பாஜக.. புட்டுப் புட்டு வைத்த காங்கிரஸ்.!!



இதற்கு பதில் அளித்துள்ள அமெரிக்க போர் நிபுணரும், நவீன போர் மையத்தின் தலைவருமான ஜான் ஸ்பென்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியாவின் டி4 ட்ரோன் தடுப்பு ஆயுதத்தின் செயல்பாடு மிகவும் ஈர்த்தது. இந்தியாவை நோக்கி வந்த பாகிஸ்தான், துருக்கி ட்ரோன்களை முடக்கியதில் டி4 முக்கிய பங்காற்றியது. இது போன்ற குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட ட்ரோன் தடுப்பு கருவி அமெரிக்காவின் தெற்கு எல்லை பாதுகாப்புக்கு தேவை’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதலில், இந்தியா பயன்படுத்திய தொழில்நுட்ப திறன்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் ஜான் ஸ்பென்சரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: அவரு பாஜகவின் 'ஸ்லீப்பர் செல்'லுங்க.. சசி தரூரை போட்டு பொளக்கும் தோழர்கள்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share