வீட்டு வேலை செய்யமாட்டியா? கணவன் கழுத்தில் கத்தியை இறக்கிய மனைவி...! பயங்கரமான ஆளு தான் போல...!
அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாததற்காக கணவரின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக இந்திய வம்சாவளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்ய மறுத்த கணவனின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலை செய்ய மறுத்த கணவனை மனைவியே கத்தியால் குத்தியதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் வட கரோலினாவின் பாக்ஸ்ஹேவன் டிரைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்த் சிங். இவரது மனைவி சந்திர பிரபா சிங். இந்திய வம்சாவளியான இவர் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் வீட்டை சுத்தம் செய்வது தொடர்பாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்திர பிரபா தனது கணவர் அரவிந்த் சிங் கழுத்தில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அரவிந்த் சிங் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக அறிந்ததும் விசாரணை நடத்திய போலீசார் சந்திர பிரபாவை கைது செய்துள்ளனர். போலீசாரிடம் சந்திர பிரபா கூறும் போது, காலை உணவு தயாரிக்கும் போது தன் கணவரிடம் உதவுமாறு கேட்டதாக குறிப்பிட்டார். அவர் வீட்டை சுத்தம் செய்யாததால் தான் மிகவும் வருத்தத்தில் இருந்ததாகவும் கையில் கத்தியுடன் திரும்பிய போது தற்செயலாக கணவரின் கழுத்தில் கத்தி பட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: ஒரே டைம்மில் 2 வேலை..!! அமெரிக்காவில் கையும் களவுமாக சிக்கிய இந்தியர்..!!
ஆனால் கணவர் அரவிந்த் சிங் தனது மனைவி வேண்டுமென்றே தன்னை குத்தியதாக குற்றம் சாட்டியிருக்கிறார். கைது செய்யப்பட்ட சந்திர பிரபா ஜாமினில் வெளிவந்துள்ளார். இருப்பினும் பணிபுரியும் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இறுதி கட்டத்தில் அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம்..!! இந்தியா வரி 15-16%க்கு குறைய வாய்ப்பு..??