அந்தமானில் நார்த் சென்டினல் தீவுக்குச் சென்ற அமெரிக்கர் கைது.. பழங்குடியினருக்கு தொந்தரவா என விசாரணை..!
அந்தமானில் உள்ள தடை செய்யப்பட்ட நார்த் சென்டினல் தீவுக்கு சென்ற அமெரிக்க இளைஞரை கைது செய்து, அவர் பயன்படுத்த படகையும் சிறப்பு விசாரணைக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.
பூர்வகுடிகள் எனப்படும் பழங்குடியினர் வசிக்கும் நார்த் சென்டினல் தீவு பாதுக்காக்கப்பட்ட பகுதியாகும். இங்கு மனிதர்கள் செல்ல அனுமதியில்லை. இந்தத் தீவுக்கு யாருக்கும் தெரியாமல் கடந்த 3ம் தேதி தனியார் படகுமூலம் சென்ற அமெரிக்க இளைஞர் மைக்கேலியோ விக்டர் போலயக்(24), அங்கு சில பொருட்களை விட்டுச் சென்று அங்கிருந்த கடல் மண்ணை மட்டும் எடுத்து வந்துள்ளார்.
அமெரிக்க இளைஞர் சென்ற நேரத்தில் பழங்குடியினர் யாரும் இல்லை என்பதால் இவர் உயிருடன் திரும்பினார். ஒருவேளை பழங்குடியினர் கண்ணில் பட்டிருந்தால், இவர் உயிருடன் திரும்பியிருக்கமாட்டார். கடந்த 2018ம் ஆண்டு இதுபோன்று அமெரிக்க இளைஞர் ஜான் ஆலன் பழங்குடியினரால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி... எல்லாம் செய்தும் திமுக ஒப்பாரி வைக்கிறது- சல்லி சல்லியாய் உடைத்த மோடி..!
அமெரிக்க இளைஞர் மைக்கேல் விக்டர் சென்டினல் தீவுக்கு வந்து சென்றது போஸீருக்கு தெரிந்ததையடுத்து, சிஐடி போலீஸார் அவரை கடந்த மாதம் 31ம்தேதி கைது செய்தனர். சென்டினல் பழங்குடியினர் வசிக்கும் அந்தத்தீவில் வேறு ஏதேனும் பொருட்களை அமெரிக்க இளைஞர் வீசிச் சென்றாரா என்பது குறித்தும் அதிகாரிகள் படகில் சென்று தொலைவில் இருந்தவாரே ஆய்வு செய்தனர்.
அந்தமான் நிகோபல் போலீஸ் டிஜிபி எச்எஸ், தாலிவால் கூறுகையில் “பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் உதவியுடன், வடக்கு சென்டினல் தீவுக்கு சென்று, அமெரிக்க இளைஞர் ஏதேனும் பொருட்களை வீசிச் சென்றாரா என்பது குறித்து பைனாகுலர் மூலம் படகில் இருந்தவாரே ஆய்வு செய்தனர். ஏனென்றால் மனிதர்கள் அறிமுகமின்றி வசிக்கும் சென்டினல் பழங்குடியினருக்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் அவர்கள் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என்பதால் ஆய்வு செய்யப்பட்டது. மனிதர்களைத் தாக்கும் எந்த நோயும் அறியாதவர்கள், சாப்பிடும் பொருட்களும் அறியாதவர்கள், அவர்களுடன் நாம் பழக நேர்ந்தால், உணவுப் பொருட்களைப் பகிர்ந்தால் அவர்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடும்.
கடல் அலை கொந்தளிப்பாக இருந்தபோதிலும், சென்டில் தீவில் முழுமையாக அதிகாரிகள் ஆய்வுசெய்து வேறு யாரேனும் இருக்கிறார்களா என்றும், சென்டினல் பழங்குடியினருக்கு தொந்தரவு ஏதும் இருக்கிறதா என்றும் ஆய்வு செய்தனர்.
சிறப்பு விசாரணைப் படையுடன், அந்தமான் ஆதிம் ஜன்ஜாத்தி சமிதி அமைப்பின் அதிகாரிகள், பழங்குடி நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர். கைது செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் இருக்கிறார். நார்த் சென்டினல் தீவைச் சுற்றிப் பார்த்த அமெரிக்க இளைஞர் ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்துள்ளார். அந்தப் பகுதியில் இளைஞர் வீசிச் சென்ற குளிர்பானங்கள் ஏதும் இல்லை. இந்தத் தீவுக்கு செல்வதற்காக தனியாக ஒருமோட்டாரை வாங்கி, உள்ளூர் மெக்கானிக் உதவியுடன் படகில் மோட்டாரைப் பொருத்தி இயக்கியுள்ளார்.
இந்த இளைஞர் முதல்முறையாக நார்த் சென்டில் தீவுக்கு வரவில்லை. கடந்த அக்டோபர் மாதம் போர்ட் ப்ளேயர் தீவுக்கு இந்த இளைஞர் வந்துள்ளார். அங்கிருந்து நார்த் சென்டினல் தீவுக்கு செல்ல முயன்றபோது ஹோட்டல் ஊழியர்கள் தடுத்துவிட்டனர். கடந்த ஜனவரி மாதம் போர்ட்ப்ளேயர் வந்து தனியாக மோட்டார் வாங்கி, பார்டாங் தீவுக்கு சென்று படகில் மோட்டாரைப் பொருத்தி படகை இயக்கியுள்ளார் அமெரிக்க இளைஞர். மேலும், ஜாரவா பழங்குடி மக்களையும் சட்டவிரோதமாக வீடியோவும் எடுத்துள்ளது தெரியவந்தது.
இந்த இளைஞர் மீது வெளிநாட்டினர் சட்டம் 1946, அந்தமான் நிகோபர் திருத்த ஒழுங்குமுறைச் சட்டம் 2021 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யார் இந்த சென்டினல் பழங்குடி மக்கள்..?
உலகின் பிற மக்களோடு தொடர்பின்றி வாழ்ந்து வருபவர்கள்தான் சென்டினல் பழங்குடியின மக்கள். இந்திய அரசின் ஆவணங்களின்படி, சென்டினல் தீவு ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகள் பழையானது. அங்குள்ள சென்டினல் பழங்குடியினர் பூர்வீகம் ஏறக்குறைய 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று மத்திய அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உருவான முதல் மனித இனம், ஆசியாவுக்குள் வரும்போது, இந்த சென்டினல் மக்கள் வந்துள்ளார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நார்த் சென்டினல் தீவு மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டபகுதி. இங்கு மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்டு அந்தமான் நிகோபர் தீவு பாதுகாப்புச் சட்டம் 1956-ன்கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். தடையை மீறிச் செல்வோருக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
யார் இந்த சென்டினல் மக்கள்?
நார்த் சென்டினல் தீவில் வசிக்கும் நெக்ரிட்டோ வகை பழங்குடி மக்களே நார்த் சென்டினல் மக்கள். உலகின் பிற மனிதர்களோடு இதுவரை எந்தத் தொடர்பும் இன்றி, தனிமையில் கற்கால வாழ்க்கை வாழ்பவர்கள். ஜாரவா பழங்குடி மக்களின் அடிப்படை உடற்கூறுகள் இந்த நார்த் சென்டினல் மக்களுக்கு உண்டு.
சென்டினல் மக்களின் பூர்வீகம் குறைந்தபட்சம் 30 ஆயிரம் ஆண்டுகளாகும். இந்தத் தீவில் ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
எப்படி பாதுகாக்கப்பட்டுள்ளனர்?
1956-ம் ஆண்டு பழங்குடி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்தமான் நிகோபர் தீவுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அந்தமானில் பழங்குடியினர் வாழும் பகுதிக்குள் மத்திய அரசின் அனுமதியின்றி யாரும் செல்லக்கூடாது. அவர்களைப் புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல், உணவுப்பொருட்கள், உடைகள், உள்ளிட்டவை கொடுக்க முயற்சித்தல் குற்றமாகும், அபராதமும் விதிக்கப்படும்.
சென்டினல் பழங்குடிகள் எப்படிப்பட்டவர்கள்?
அந்தமான் தீவுகளில் அந்தமானிஸ், கிரேட் அந்தமானிஸ், ஓங்காஸ், ஜார்வாக்கள், சென்டினல்கள் எனப் பலவகை பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். அதில் சென்டினல்கள் உலகின் பிற மனிதர்களின் தொடர்பின்றியும், நாகரீகத்தை அறியாமலும் வாழ்ந்து வருகிறார்கள்.
சென்டினல் மக்கள் இன்னும் வில் அம்பு, கற்களால் ஆன ஆயுதங்களையும் தங்களின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களின் தாக்குதல் துல்லியம் 350 அடியாகும். அதாவது 350 அடியில் உள்ள பொருட்களையும் மிகத் துல்லியமாக தாக்கும் திறமை இவர்களிடம் இருக்கிறது. அதனால்தான் சென்டினல் பழங்குடிகளை நெருங்க மீனவர்கள், கடலோர படையினர் அஞ்சுகிறார்கள். சென்டினல் தீவில் இருக்கும் காட்டுப்பன்றி, தேன், பழங்கள், இலைகள், மீன், தேங்காய் உள்ளிட்ட உணவுப்பொருட்களை உண்டு வாழ்கின்றனர்.
இதையும் படிங்க: திடீரென உடைந்த ரோலர் கோஸ்டர்.. அந்தரத்தில் இருந்து விழுந்த பெண்.. வருங்கால கணவன் முன் நடந்த சோகம்..!