×
 

போடு ரகிட.. ரகிட..!! - தமிழ்நாட்டை தட்டி தூக்குறோம்... அண்ணாமலைக்கு அமித் ஷா கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!

வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு கூட்டணி அமைப்பது, அதில் சேர்க்கக்கூடிய கட்சிகள், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் ஆகியவற்றை மையமாக கொண்டு இருவரும் கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது. தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக இருந்தது. இந்த சந்திப்பில் தமிழக அரசியல் சூழ்நிலை, அதிமுக பிரிவினை, எதிர்கால கூட்டணி அமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஓபிஎஸ் அமித்ஷாவுடன் விரிவாக ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகின. டெல்லி பயணத்திலிருந்து சென்னை திரும்பிய ஓபிஎஸ் அதனை தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரம்

குறித்து சில முக்கிய கருத்துக்களையும் வெளிப்படுத்தினார். இதனை அடுத்து  பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அண்ணாமலையும் அமித்ஷாவும் நடத்திய இந்த சந்திப்பு பல்வேறு பரிமாணங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு கூட்டணி அமைப்பது, அதில் சேர்க்கக்கூடிய கட்சிகள், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் ஆகியவற்றை மையமாக கொண்டு இருவரும் கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சந்திப்பில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்கும் விவகாரமும் பேசப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் மற்றும் தினகரனை கூட்டணியில் சேர்க்க அண்ணாமலை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், ஓபிஎஸ் டெல்லி சென்ற ஒரு நாளுக்குள் அண்ணாமலையும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்திருப்பது தமிழக அரசியலில் புதிய சமிக்ஞைகளை உருவாக்கி உள்ளது. மேலும் இந்த முக்கிய சந்திப்பின் போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, பி.எல் சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: அமித் ஷா காலில் முதலில் விழுவது யார்? ... இபிஎஸ், ஓபிஎஸை பங்கமாய் கலாய்த்த உதயநிதி...!

இதனால் வரவருக்கும் நாட்களில் தமிழக அரசியலில் கூட்டணி கணக்கில் பெரிய மாற்றங்களுக்கு வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். திமுக ஆட்சிக்கு எதிராக வழுவான மாற்றுக்கட்சி சக்தியை உருவாக்குவதற்காக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பலதரப்பட்ட அரசியல் ராஜதந்திரங்களை கையாண்டு வருகிறார். மாநிலத்தில் தன்னுடைய தனிப்பட்ட மக்கள் அடிப்படை மற்றும் இளைஞர் ஆதரவை அதிகரிப்பதோடு, எதிர்கட்சிகளுக்குள் காணப்படும் பிளவுகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பல்வேறு அணுகு முறைகளை மேற்கொண்டு வருகிறார். 

அதிமுக முன்னாள் தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றோர் மீண்டும் கூட்டணியில் சேர்த்து கொள்ளப்படுவது குறித்து நிலவும் பேச்சு வார்த்தைகளும், அண்ணாமலையின் அரசியல் கணக்கீட்டின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றன. திமுக அரசியல் நடவடிக்கைகளை சாடுவது, ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்கள் முன் புதிய அஜெண்டா உருவாக்குவது, தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கான அடித்தளத்தை வலுபடுத்துவது தொடர்பாகவும் மத்திய தலைமையுடன் அடிக்கடி ஆலோசனைகள் நடத்துவது என அண்ணாமலைக்கு அடுத்தடுத்து அசைமெண்ட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வரப்போகும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக கூட்டணியை விரிவுபடுத்தி, அதனை திமுகவுக்கு மாற்றாக நிறுத்தும் முயற்சியில் அண்ணாமலை தீவிரமாக செயல்பட்ட வேண்டும் என பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 
 

இதையும் படிங்க: “உடனே புறப்பட்டு வாங்க...” - அமித் ஷாவிடம் இருந்து வந்த அழைப்பு... திடீரென நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share