கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!
கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புது கட்சிகளை பற்றி பேச விரும்பவில்லை என தவெக-வை தாக்கி அண்ணாமலை பேசினார்.
கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வகித்தார். இதில், கூட்டணி கட்சியினர், அதிமுக எம்எல்ஏக்கள் என பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய போது, தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் 8,008 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 2,080 பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 39,999 வழக்குகள் போடப்பட்டள்ளது.
குழந்தைகள், மூதாட்டி, பெண்களுக்களுக்கான பாலியல் வழக்கு இந்திய அளவில் இங்கு அதிகமாக இருக்கிறது. முழு நேர டிஜிபி நியமிக்க வேண்டும். உங்கள் ஓட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் இருக்க வேண்டும். புதுசா வருபவர்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை. கடந்த 5 ஆண்டில் 65,518 கிலோ கஞ்சா பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!
தாய்மார்களுக்கு கஞ்சா விற்பவர்கள் யார் என் நன்கு தெரியும். அவர்களை விட்டால் பிடித்து கொடுத்து விடுவார்கள். 8025 கிலோ போதை பொருள் பிடிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டில் 1459 கோடி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக மாற்ற வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், எஸ்.பி.வேலுமணி பேசும் போது : கோவைக்கு திமுக எந்த திட்டமும் செய்யவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். கஞ்சா, புது, புது போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. திமுக முற்றிலுமாக கோவையை புறக்கணித்துள்ளது.
தேர்தல் நேரம் என்பதால் டிசைன் டிசைனாக வந்து ஏமாற்றுவார்கள். எந்த புது கட்சிக்கும் ஓட்டு போடக்கூடாது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு நாங்கள் தான். எடப்பாடி ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்து திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருவார். இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !