பாஜவில் 287 வாரிசுகளுக்கு பதவி?! திமுகவை நீங்க குறை சொல்லலாமா? அப்பாவு அதிரடி!
பாஜகவில் 287 வாரிசுகள் பதவியில் உள்ளனர். இத்தனை வாரிசுகளை வைத்திருக்கும் பா.ஜ.க. ஒரே ஒரு வாரிசு வைத்திருக்கும் தி.மு.க.வை குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என அப்பாவு சொன்னார்.
நெல்லை மாவட்டம் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் எம். அப்பாவு இன்று தொடங்கி வைத்தார். ராதாபுரம் தொகுதியில் இதுவரை நடத்தப்பட்ட 15 முகாம்களில் மக்களுக்கு காலை சிற்றுண்டி முதல் மாலை தேநீர் வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன.
முழு உடல் பரிசோதனை செய்து ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பைல் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பரிசோதனைகளுக்கு வெளியில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் என்றும், இங்கு ஒரு ரூபாயும் செலவில்லாமல் மக்கள் சேவை பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: “பணகுடி, வள்ளியூர், கூடங்குளம், திசையன்விளை உள்ளிட்ட ராதாபுரம் தொகுதியில் நடத்தப்பட்ட 15 நலம் காக்கும் முகாம்களிலும் காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை தேநீர் என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை 'Sir'ஐ விட... இது பயங்கரமான 'SIR'இல்லை!! நயினார் மாஸ் பேச்சு!
முகாமில் பங்கேற்றோருக்கு முழு உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடல்நிலையை பதிவு செய்த தனிப்பட்ட பைல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை பரிசோதனைகளுக்கு வழக்கமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் இங்கு மக்கள் ஒரு ரூபாயும் செலவு செய்யாமல் சேவையைப் பெற்றுள்ளனர்” என்றார்.
பீகார் தேர்தல் குறித்து அவர் கூறியதாவது: “பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் சன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. அவர் ஒரு ஆலோசனை வழங்குபவர் தான். ஆனால் அவருக்கு களப்பணியில் உள்ள உண்மையான நிலைமை தெரியாது. அவர் யோசனை சொல்வார். ஆனால் அது அவர் சொந்த ஊரிலேயே செல்லுபடியாகவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்றார்.
வாரிசு அரசியல் குறித்து அவர் மேலும் கூறியதாவது: “பீகார் தேர்தலால் வாரிசு அரசியல் தோல்வியடைந்து விட்டது என்று பா.ஜ.க. கூறுகிறது. அது தமிழ்நாட்டிலும் தொடரும் என அக்கட்சி கருத்து தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் இன்று என்ன செய்கிறார்? ராணுவ அமைச்சரின் மகன் என்ன செய்கிறார்? பா.ஜ.க.வில் 287 வாரிசுகள் பதவியில் உள்ளனர். இத்தனை வாரிசுகளை வைத்திருக்கும் பா.ஜ.க. ஒரே ஒரு வாரிசு வைத்திருக்கும் தி.மு.க.வை குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்றார்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை பல லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். ராதாபுரம் தொகுதியில் மட்டும் 15 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் இலவசமாக உயர்தர மருத்துவ சேவை பெறுவதால், அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று சபாநாயகர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகள், மருத்துவர்கள், பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். திட்டத்தின் வெற்றி, தமிழக அரசின் சுகாதாரக் கொள்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தொடர் நெருக்கடி கொடுக்கும் அமலாக்கத்துறை!! அடக்கி வாசிக்கும் அமைச்சர் நேரு!! தேர்தல் ஃபீவர்!