மண்ணுக்குள் புதைந்த கிராமம்.. ஒரே நாளில் 1000 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!
சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த 1000 பேர் பலியாகி உள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் ஒரு பயங்கரமான பேரழிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் ஒரு கிராமம் முழுவதும் புதைந்து போயுள்ளது. 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மர்ரா மலைப் பகுதியில் நடந்த இந்த பயங்கரமான பேரழிவு குறித்து சூடான் விடுதலை இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது, இந்த சம்பவத்தில் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.
சூடானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, மர்ரா மலைகளில் உள்ள கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. கிராமமே முற்றிலும் தரைமட்டமாகி விட்டதாக சூடான் விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்தி வரும் அப்டேல்வாஹித் முகமது நூர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பயமா இருக்கா? அடுத்த வருஷம் இன்னம் பயங்கரமா இருக்கும்... திமுகவுக்கு சவால்விட்ட அண்ணாமலை...!
மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடும் சேதத்தை சந்தித்துள்ள இப்பகுதியில் சடலங்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ஐநா சபை மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சூடானில் தற்போது உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இது சாதாரண மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. பலர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மர்ரா மலைப் பகுதியில் வாழ்கின்றனர். இதுபோன்ற மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு கிராமத்தில் சமீபத்திய விபத்து நிகழ்ந்துள்ளது. ஒரு இயற்கை பேரழிவு தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வந்தவர்களின் உயிரைப் பறித்துள்ளது.
இதையும் படிங்க: என்னாது.. டிரம்ப் இறந்துட்டாரா? - திடீரென ட்ரெண்டாகும் "TRUMP IS DEAD" ஹேஷ்டேக் - உண்மை என்ன?