×
 

அமெரிக்காவில் அதிர்ச்சி: ஹோவர்டு பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிசூடு..!! 4 பேர் காயம்..!!

அமெரிக்காவில் உள்ள ஹோவர்டு பல்கலைக்கழகம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் உள்ள புகழ்பெற்ற வரலாற்று ரீதியான ஹோவர்டு பல்கலைக்கழகம் அருகே வெள்ளிக்கிழமை இரவு (அக்டோபர் 24) துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் நான்கு பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமாகாவும், மற்ற மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஹோம்கம்மிங் விழாவின் உச்சக்கட்டத்தில் நடந்தது, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அதிகாரிகளின் தகவல்படி, சம்பவம் இரவு 8:23 மணியளவில் ஹோவர்டு பிளேஸின் 600வது தொகுதியில் நடந்தது. இது பல்கலைக்கழகத்தின் மைய வாயில் (Yard) மற்றும் கட்டிடக்கலை பள்ளி அருகில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: மோன்தா புயல் எப்ப வரும்? எங்கெல்லாம் மழை... வானிலை மையத்தின் முக்கிய அப்டேட்...!

ஹோம்கம்மிங் விழாவின் ஒரு பகுதியாக 'கிரீக் ஸ்டெப் ஷோ' (Greek Step Show) போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் நேரத்தில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் உடனடியாக அங்கிருந்து பதறியடித்துக்கொண்டு ஓடினர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் அருகிலுள்ள மார்கன் ஸ்டேட் பல்கலைக்கழக (Morgan State University) மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹோவர்டு பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இதில் பாதிக்கப்படவில்லை. துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கியது. இரவு 11 மணிக்கு முன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், மூன்று ஆயுதங்கள் சம்பவ இடத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

இருப்பினும், துப்பாக்கிச்சூட்டின் முழு காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி இன்னும் தெரியவில்லை. "இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். ஹோம்கம்மிங் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளைப் பாதிக்கக் கூடாது" என்று டிசி போலீஸ் தலைவர் கூறினார். இச்சம்பவத்தால் ஹோவர்டு பல்கலைக்கழகத்தின் ஹோம்கம்மிங் நிகழ்ச்சிகள் பாதிக்கப்படவில்லை. சனிக்கிழமை (அக்டோபர் 25) மார்கன் ஸ்டேட் அணியுடன் நடைபெறும் போட்டி மற்றும் பிற நிகழ்ச்சிகள் தொடரும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இருப்பினும், பாதுகாப்பைப் பலப்படுத்த, போலீஸ் கூடுதல் பாதுகாப்பு படையை அங்கு அனுப்பி வைத்துள்ளது.

சம்பவ இடத்தைச் சுற்றி ஜார்ஜியா அவென்யூ மற்றும் பிற தெருக்களில் போக்குவரத்து தடைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஹிஸ்டாரிக்கலி பிளாக் காலேஜ்கள் மற்றும் யூனிவர்சிட்டிகளின் (HBCUs) ஹோம்கம்மிங் விழாக்களில் இது போன்ற வன்முறைகள் அரிதாக இல்லை. 2023-ல் மார்கன் ஸ்டேட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டை நினைவூட்டும் இந்த சம்பவம், பொது பாதுகாப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டு விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: தேசிய விருதா முக்கியம்? மக்கள் அங்கீகரிப்பார்கள்..! - பைசன் படத்தை பாராட்டிய முத்தரசன்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share