×
 

ஈரான் தேசிய கீதம் பாட மாட்டோம்! கால்பந்து வீராங்கனைகள் அதிரடி! அடைக்கலம் கொடுக்க ஆஸ்திரேலியா முடிவு!

ஈரான் தேசிய கீதத்தை பாட மறுத்து சர்ச்சையில் சிக்கிய, ஈரான் கால்பந்து வீராங்கனைகளுக்கு, மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியா அரசு விசா வழங்கியுள்ளது.

ஈரான் தேசிய கீதத்தை பாட மறுத்து சர்ச்சையில் சிக்கிய ஈரான் பெண்கள் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கு, மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியா அரசு விசா வழங்கியுள்ளது. இது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈரானில் பெண்கள் உரிமைகள் குறித்த போராட்டங்கள் தொடரும் நிலையில், விளையாட்டு வீராங்கனைகள் அரசுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், ஈரான் அணி தென் கொரியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் தேசிய கீதம் ஒலிக்கும்போது ஐந்து வீராங்கனைகள் – ஃபாத்திமா பசந்திதே, ஜஹ்ரா கன்பாரி, ஜஹ்ரா சர்பாலி, ஆதிஃபா ரமசான்சாதே, மோனா ஹமூதி – அமைதியாக நின்றனர். கீதத்தை பாட மறுத்தனர். இது ஈரான் அரசுக்கு எதிரான அமைதியான எதிர்ப்பாக பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!! லோக்சபாவில் துவங்கியது விவாதம்!

இதனால் ஈரான் அரசு ஊடகங்கள் அவர்களை "போர்கால துரோகிகள்" என்று கண்டித்தன. வீட்டுக்கு திரும்பினால் கடுமையான தண்டனை, சிறை, கொலை அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற பயம் எழுந்தது.

ஆஸ்திரேலியாவில் போட்டி முடிந்த பிறகு அணி திரும்ப தயாரான நிலையில், இந்த ஐந்து வீராங்கனைகள் அணியின் ஹோட்டலில் இருந்து தப்பி, பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். மனித உரிமை அமைப்புகள், கால்பந்து சங்கங்கள், ஆஸ்திரேலியாவில் உள்ள ஈரானிய சமூகம் ஆகியவை அவர்களுக்கு தஞ்சம் அளிக்க கோரிக்கை விடுத்தன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் Truth Social இல் பதிவிட்டு, ஆஸ்திரேலியா விசா வழங்காவிட்டால் அமெரிக்கா ஏற்கும் என்று அறிவித்தார். இதனால் ஆஸ்திரேலியா அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது.

உள்துறை அமைச்சர் டோனி பர்க், ஐந்து வீராங்கனைகளையும் சந்தித்து மனிதாபிமான விசா வழங்கினார். அவர்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ளனர். மற்ற அணி உறுப்பினர்களுக்கும் உதவி வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்தார்.

இந்த சம்பவம் ஈரானில் பெண்கள் உரிமைகள் போராட்டத்தை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவின் முடிவு மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக பாராட்டப்படுகிறது. வீராங்கனைகள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: திமுகவின் COPY கலாச்சாரம்..!! TVK கொடி எடுத்தாலும் ஆச்சரியமில்ல... நாஞ்சில் சம்பத் விமர்சனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share