×
 

பாகிஸ்தானுக்கு கெட்ட செய்தி... ராணுவத்தின் உயிர்நாடியை களமிறக்கும் இந்தியா..!

ஏஎல்ஹெச் என்பது ராணுவத்தின் உயிர்நாடி. துருவ் ஹெலிகாப்டரின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

இந்திய ராணுவத்திற்கு ஒரு நல்ல நல்ல செய்தி. ராணுவத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஏஎல்ஹெச் ஹெலிகாப்டர்கள்  மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.  ஜனவரி 5 ம் தேதி  போர்பந்தரில் இருந்து கடலுக்குள் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹரி லீலா கப்பலில் இருந்து, காயமடைந்தவர்களை மீட்க கடலோரக் காவல்படையில் ஹெலிகாப்டர் ஒன்று மணியளவில் அனுப்பட்டது. அப்போது, ஏஎல்எச் ஹெலிகாப்டர் (Helicopter Crash) கட்டுப்பாட்டை இழந்து கடலில் அவசரமாக தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது.  விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய, ஏஎல்ஹெச் குறைபாடு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தற்போது முழுமையான விசாரணைக்குப் பிறகு, ராணுவத்தின் அனைத்து ஏஎல்ஹெச் துருவ் ஹெலிகாப்டர்களும் பறக்க விசாரணைக் குழு அனுமதி அளித்துள்ளது.  பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் செயல்பாட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஏஎல்ஹெச் துருவ் ஹெலிகாப்டர்கள் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானாலும் ,  அனைத்து ஏஎல்ஹெச் துருவ் வகை  ஹெலிகாப்டர்களும்  நிறுத்தி வைக்கப்படும். முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் அனைத்து ஹெலிகாப்டர்களும் பறக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஏஎல்ஹெச் ஹெலிகாப்டரில் வெவ்வேறு பதிப்புகள் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏஎல்ஹெச் எம்.கே-1, எம்.கே-2,  எம்.கே-3 மற்றும் எம்.கே-4 ஆயுதமயமாக்கப்பட்ட பதிப்பு ருத்ரா ஆகியவை அடங்கும். இந்திய இராணுவத்தின் மூன்று பிரிவுகளான இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றால் 330 க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படிங்க: உள்ளே நுழைந்த ரஃபேல் போர் விமானங்கள்? அலறவிட்ட இந்தியா; பதறிபோய் பாக். செய்த காரியம்!!

இந்த ஏஎல்ஹெச் ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டால், சீட்டா மற்றும் சேத்தக் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும்.  இந்திய இராணுவம் அதிகபட்சமாக 145 ஏஎல்ஹெச் ஹெலிகாப்டர்களை வைத்துள்ளது. இவற்றில், 75  ஹெலிகாப்டர்கள் ஆயுதங்களை சுமக்கும்  ஏஎல்ஹெச் எம்.கே 4 ருத்ரா வகை. இராணுவம் ஏஎல்ஹெச்- இருந்து 25 கூடுதல் ஏஎல்ஹெச் மார்க் 3 ஐ வகைகளையும் இயக்குகிறது.  இந்திய விமானப்படையில் சுமார் 70 துருவ்களும், கடற்படையில் 18 ஏஎல்ஹெச்களும் உள்ளன. இது தவிர, விமானப்படை மற்றும் இராணுவத்திடம் 15 இலகுரக போர் ஹெலிகாப்டர்களான பிரசாந்த் உள்ளிட்டவைகளும் இருக்கின்றன. 

ஏஎல்ஹெச் என்பது ராணுவத்தின் உயிர்நாடி. துருவ் ஹெலிகாப்டரின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதை எந்த வானிலையிலும் பயன்படுத்தலாம். இது கடல் மீதும், 15000 அடிக்கு மேல் உயரமான பகுதிகளிலும் பறக்க முடியும். ஏஎல்ஹெச் ஹெலிகாப்டரால்  இரவில்கூட எளிதாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கடந்த சில மாதங்களாக ஏஎல்ஹெச் துருவ் இல்லாததால், ராணுவம் அதன் சீட்டா மற்றும் சேடக் ஹெலிகாப்டர்கள் மூலம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன தேவைப்படும்போது, ​​விமானப்படையின் எம்.ஐ-17 ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டது.  ராணுவத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஏஎல்ஹெச் ஹெலிகாப்டர்கள் தர்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன 

இதையும் படிங்க: ராணுவ பலம் யாருக்கு அதிகம்..? இந்தியா- பாகிஸ்தான் ஓர் ஒப்பீடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share