×
 

பாகிஸ்தானுடன் கைகுலுக்கும் சீனா! இந்தியாவுக்கு தான் பேராபத்து! பலூச் தலைவர் அவசர கடிதம்!

பலுசிஸ்தானில் சீனா தமது ராணுவப்படைகளை நிலை நிறுத்தக்கூடும் வாய்ப்புகள் உள்ளதால், இந்த விவகாரத்தில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும் என்று பலுச் தலைவர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

புதுடெல்லி: பாகிஸ்தானின் அடக்குமுறைக்கு உள்ளாகி வரும் பலுசிஸ்தான் மக்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மிர்யார் பலுச், இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அடுத்த சில மாதங்களுக்குள் பலுசிஸ்தான் பகுதியில் சீனா தனது ராணுவப்படைகளை நிலைநிறுத்தக்கூடும் என்றும், இது பிராந்தியத்துக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த நிலைமையை எதிர்கொள்ள இந்தியா உடனடியாக தலையிட்டு பலுசிஸ்தான் மக்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பலுசிஸ்தான் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆதிக்கத்தின் கீழ் அடக்குமுறைக்கு ஆளாகி வருவதாகவும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தை வேரறுக்கவும் பிராந்திய இறையாண்மையை காக்கவும் இந்தியாவுடன் பரஸ்பர ஒத்துழைப்பு தேவை என்றும் மிர்யார் பலுச் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: இந்தியா - பாக்., இடையே 35 ஆண்டாக தொடரும் பாரம்பரியம்! அணுசக்தி நிலையங்களின் பட்டியல் பரிமாற்றம்!!

இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பலுசிஸ்தான் மக்கள் பாராட்டியதாகவும், பாகிஸ்தான் பிடியில் இருந்து தங்களை மீட்க இந்தியா உதவ வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலுசிஸ்தான் பகுதியில் சீனாவின் ராணுவ நிலைநிறுத்தம் பற்றிய தகவல் பிராந்திய பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரம் (சிபிஇசி) திட்டத்தின் ஒரு பகுதியாக க்வாடர் துறைமுகம் உள்ள பலுசிஸ்தானில் சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ராணுவ நிலைநிறுத்தம் நடந்தால் இந்தியாவுக்கு அது கடும் சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது.

பலுசிஸ்தான் மக்களின் சுதந்திர போராட்டத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது. இந்தியாவின் உதவியால் பலுசிஸ்தான் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற முடியும் என்று அப்பகுதி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். மிர்யார் பலுச்சின் இந்தக் கடிதம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.

இந்திய அரசு இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், பிராந்திய பாதுகாப்பு கருதி இந்த விவகாரத்தை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர்! அடிவாங்குனது உண்மை தான்!! பொளந்து கட்டிய இந்தியா!! உண்மையை ஒப்புக்கொள்ளும் பாக்.,!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share