பள்ளி மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்!! அலறி அடித்து ஓடிய மாணவர்கள்.. நொடியில் போன உயிர்!
வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போர் விமானம் பயிற்சிக்குச் சென்றபோது தீப்பிடித்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில், உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் வங்கதேச விமானப்படையின் F-7 BGI பயிற்சி போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி, தீப்பிடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கு. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்குது. இடிபாடுகளில் மாணவர்கள் உட்பட பலர் சிக்கியிருக்கலாம்னு அஞ்சப்படுது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருதுனு டாக்கா காவல்துறையும், தீயணைப்பு படையும் உறுதி படுத்தியிருக்கு.
இந்த விபத்து, இன்று மதியம் 1:06 மணிக்கு விமானம் புறப்பட்ட சில நிமிஷங்களில், 1:30 மணி அளவில் நடந்திருக்கு. இந்த F-7 BGI விமானம், சீனாவில் தயாரிக்கப்பட்ட பயிற்சி விமானம், வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு, உத்தராவில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரியின் கேன்டீன் கட்டிடத்தின் மேற்கூரையில் விழுந்து நொறுங்கியிருக்கு. விமானம் விழுந்த உடனே தீப்பிடிச்சு, புகை மண்டலமா எழுந்திருக்கு. இந்த பயங்கர காட்சியை பார்த்த மாணவர்களும், ஆசிரியர்களும் பதறியடிச்சு ஓடியிருக்காங்க. X-ல பரவி வர்ற வீடியோக்களில், தீயும் புகையும் கிளம்பற காட்சிகள், மாணவர்கள் பயத்தோடு ஓடற காட்சிகள் இடம்பெறுது.
விமானப்படையின் இன்டர்-சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) அமைப்பு, இந்த விமானம் தங்களுடையதுனு உறுதி படுத்தியிருக்கு, ஆனா விபத்துக்கு காரணம் என்னனு இன்னும் விவரமா சொல்லல. “விமானம் கல்லூரி வளாகத்தில் விழுந்து தீப்பிடிச்சிருக்கு. ஒருவர் இறந்திருக்கார், நாலு பேர் காயமடைஞ்சு கம்பைன்ட் மிலிட்டரி மருத்துவமனைக்கு (CMH) அனுப்பப்பட்டிருக்காங்க,”னு தீயணைப்பு படை அதிகாரி லிமா கானம் தொலைபேசியில் தெரிவிச்சிருக்கார். மைல்ஸ்டோன் கல்லூரி அதிகாரி ஒருவர், “விமானம் பள்ளி வாசல் அருகே விழுந்தது. கிளாஸ் நடந்து கிட்டு இருந்தப்போ இந்த விபத்து நடந்திருக்கு,”னு BDnews24-க்கு சொல்லியிருக்கார்.
இதையும் படிங்க: பிரம்மபுத்திராவில் அணை கட்டும் சீனா!! துவங்கியது கட்டுமானப்பணி.. இந்தியாவிற்கு காத்திருக்கும் பேராபத்து..
விபத்து நடந்த உடனே, உத்தரா, டோங்கி, பல்லாபி, குர்மிடோலா, மிர்பூர், புர்பாச்சல் ஆகிய இடங்களில் இருந்து எட்டு தீயணைப்பு படை வாகனங்கள் மீட்பு பணிக்காக விரைஞ்சு வந்திருக்கு. வங்கதேச இராணுவமும், எல்லை பாதுகாப்பு படையும் (BGB) மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைஞ்சவங்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு போயிருக்காங்க.
உத்தரா ஆதுனிக் மருத்துவமனை, டாக்கா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை, குவைத்-வங்கதேச நட்பு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு காயமடைஞ்சவங்க கொண்டு போகப்பட்டிருக்காங்க. ஒரு ஆசிரியர், “சில மாணவர்கள் தீக்காயங்களோடு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டாங்க. ஒரு மாணவனை ரிக்ஷாவுலயே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோம்,”னு சோகமா சொல்லியிருக்கார்.
இந்த சம்பவம், உத்தரா பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கு. “விமானம் விழுந்து தீப்பிடிச்சதை பார்த்து, எல்லாரும் அலறி அடிச்சு ஓடினாங்க,”னு விபத்தை நேர்ல பார்த்த ஒருத்தரு சொல்லியிருக்கார். விபத்துக்கு காரணம் என்னனு தெரியல, ஆனா இந்த விமானம் பழைய மாடல்னு சிலர் விமர்சிச்சிருக்காங்க.
முழு விசாரணை முடியற வரை, இந்த சோக சம்பவத்துக்கு பின்னால உள்ள காரணம் தெரிய வரும். இப்போதைக்கு, மீட்பு பணிகள் தொடருது, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் கவலைப்படுறாங்க.
இதையும் படிங்க: ஆயிரம் கிலோ மாம்பழம் கிஃப்டு.. பிரதமர் மோடிக்கு ஐஸ் வைக்கும் யூனுஸ்.. நட்பை வலுவாக்க திட்டம்!!