பாகிஸ்தானில் தீவிரவாதம் உண்மை... என் தாயையே கொன்று விட்டனர்... உண்மையை கக்கிய பிலாவல்..!
தீவிரவாதத்தால் நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடிகளை சந்தித்து வருகிறோம். ஆனால் நாம் என்ன பிரச்சனைகளைச் சந்தித்திருந்தாலும், அதிலிருந்து நாம் கற்றுக்கொண்டோம்.
''பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் வளர்கிறார்கள்'' என முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ''தீவிரவாதிகள் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த காலம் இருக்கிறது. பாகிஸ்தானில் வளர்ந்து வரும் பயங்கரவாதிகள் என் தாயைக் கொன்றுவிட்டனர். நானும் இந்த பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளேன்.
பாகிஸ்தானுக்கு ஒரு கடந்த காலம் இருப்பது ஒரு ரகசியம் என்று நான் நினைக்கவில்லை. அதற்காக நாங்கள் அதிக விலை கொடுத்துள்ளோம். தீவிரவாத அலைகளைக் கடந்து, பாடங்களைக் கற்றுக்கொண்டோம். உள் சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம். இவை அனைத்தும் முந்தைய வரலாறுதான். இனி நாங்கள் அதில் ஈடுபடப் போவதில்லை.
இதையும் படிங்க: 'இரத்த ஆறு ஓடுமா..? உங்க அம்மாவை கொன்றது யாரு..? பிலாவல் பூட்டோவுக்கு ஓவைசி மரண அடி..!
பாகிஸ்தானுக்கு ஒரு கடந்த காலம் உள்ளது. அதனால் எங்கள் நாடு நிறைய பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு ஒரு கடந்த காலம் உள்ளது என்பது ஒரு ரகசியமான, மறைக்கப்பட்ட விஷயம் என்று நான் நினைக்கவில்லை. அதன் பாதிப்பை நாங்கள் சந்தித்திருக்கிறோம். பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தால் நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடிகளை சந்தித்து வருகிறோம். ஆனால் நாம் என்ன பிரச்சனைகளைச் சந்தித்திருந்தாலும், அதிலிருந்து நாம் கற்றுக்கொண்டோம். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க உள் சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம்.
பாகிஸ்தானின் தீவிரவாத வரலாற்றை மறுக்க முடியாது. ஆனால் இப்போது பாகிஸ்தான் அந்த அத்தியாயத்தைத் தாண்டி நகர்ந்துள்ளது. பாகிஸ்தானின் வரலாற்றைப் பொறுத்தவரை, அது வரலாறு. இன்று நாங்கள் அதில் ஒரு பகுதியாக இல்லை. இது நமது வரலாற்றின் ஒரு துரதிர்ஷ்டவசமான பகுதி என்பது உண்மைதான். பயங்கரவாதப் பிரச்சினையைக் கையாள்வதற்கும், தன்னை மேம்படுத்துவதற்கும் பாகிஸ்தான் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம், " நீங்கள் பாகிஸ்தானில் தீவ்ரவாதத்தை ஒப்புக்கொள்கிறீர்களா? இந்த பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதிலும், அவர்களுக்கு பணம் கொடுப்பதிலும், பயிற்சி அளிப்பதிலும் பாகிஸ்தான் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? எனக் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கவாஜா, "நாங்கள் சுமார் முப்பது ஆண்டுகளாக அமெரிக்காவிற்காகவும், பிரிட்டன் உட்பட முழு மேற்கத்திய நாடுகளுக்காகவும் இந்த மோசமான வேலையைச் செய்து வருகிறோம். இது ஒரு தவறு. அதற்கான விலையை நாங்கள் செலுத்திவிட்டோம், அதனால்தான் இன்று நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். சோவியத் யூனியனுக்கு எதிராகவும், பின்னர் 9/11 க்குப் பிறகு வெடித்த போரிலும் நாங்கள் பங்கேற்கவில்லை என்றால், பாகிஸ்தானின் சாதனைப் பதிவு களங்கமற்றதாக இருந்திருக்கும்'' எனத் தெரிவித்து இருந்தார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், பிலாவல் பூட்டோவின் வாக்குமூலங்கள், இந்தியா தனது நாட்டு மக்களுக்குச் சொன்னது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மூளை என்று இந்தியா அவ்வப்போது முழு உலகிற்கும் உணர்த்தி வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடு, அதை தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்துகிறது. பஹல்காம் தாக்குதலைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தானின் இந்த வாக்குமூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கடுருதப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை மிர்புர்காஸில் நடந்த ஒரு பேரணியில் பேசிய பூட்டோ, பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால் இந்தியாவால் தூண்டப்பட்டால் போருக்குத் தயாராக உள்ளது. நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் யாராவது நமது சிந்துவைத் தாக்கினால், அதில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்'' என வன்மமாகப் பேசி இருந்தார்.
இதையும் படிங்க: ‘மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார்’.. பிலாவல் பூட்டாவை விளாசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி..!