×
 

3 பொண்ணுங்க கூட உறவு! அத வச்சி எப்ஸ்டீன் மிரட்டினான்! உலகை உலுக்கிய பாலியல் வழக்கு! பில் கேட்ஸ் ஒப்புதல்!

எனது துரோகம் குறித்த மேலும் பல பொய்களை இணைத்து கூறி, அவருடன் மீண்டும் இணையுமாறு எப்ஸ்டீன் என்னை வற்புறுத்த முயன்றார் என்று பில்கேட்ஸ் கூறினார்.

அமெரிக்க தொழில்நுட்ப உலகின் முக்கிய பிரமுகரான பில் கேட்ஸ், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய விவகாரம் குறித்து அளித்துள்ள புதிய விளக்கங்கள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் நடைபெற்ற இரகசிய விசாரணையில் அவர் அளித்த சாட்சியத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அந்த சாட்சியத்தில், தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சில உறவுகள் குறித்து எப்ஸ்டீனுக்கு தெரிந்திருந்ததாக பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணத்திற்கு வெளியே மூன்று பெண்களுடன் உறவு இருந்ததாகவும், அவற்றைப் பற்றிய தகவல்களை எப்ஸ்டீன் அறிந்திருந்ததாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய பிரிட்ஜ் விளையாட்டு வீராங்கனை மிலா அன்டோனோவா, அணு இயற்பியலாளர் கரிமா நிக்மதுலினா மற்றும் தொழில்முனைவோர் ஆலிஸ் ஜேக்கப்ஸ் நெசல்ரோட் ஆகியோருடன் தனக்கு தொடர்புகள் இருந்ததாக அவர் சாட்சியத்தில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த உறவுகளுக்கும் எப்ஸ்டீனின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பில் கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ராணுவ ரீதியாக ஈரான் மொத்தமாக தோற்றுவிட்டது! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுயதம்பட்டம்!

மேலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளுடன் பொய்யான தகவல்களையும் கலந்து கூறி, எப்ஸ்டீன் தன்னை மீண்டும் சந்திக்கவும் தொடர்பில் இருக்கவும் முயன்றதாக அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேரடியாக மிரட்டல் விடுக்கப்படவில்லை என்றாலும், எப்ஸ்டீனின் அணுகுமுறையில் மறைமுக அழுத்தம் இருந்ததாக தான் உணர்ந்ததாகவும் கேட்ஸ் கூறியுள்ளார்.

தொண்டு நிறுவனங்களுக்கான நிதி திரட்டும் முயற்சிகளில் உதவக்கூடிய செல்வந்தர்களை அறிமுகப்படுத்துவதாக கூறியதாலேயே எப்ஸ்டீனை சந்தித்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 12 முதல் 14 முறை நேரில் சந்தித்ததுடன், இரண்டு முறை காணொளி அழைப்புகளிலும் பேசியதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் வெளியான சில தனிப்பட்ட குற்றச்சாட்டுகளையும் பில் கேட்ஸ் மறுத்துள்ளார். குறிப்பாக, தனது உடல்நிலை தொடர்பாக வெளியாகிய தகவல்கள் உண்மையல்ல என்றும் அவர் கூறியுள்ளார். எப்ஸ்டீனின் குற்றச்செயல்களுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள பில் கேட்ஸின் இந்த விளக்கங்கள் அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share