“இந்து அறநிலையத்துறை கல்லூரிகளில் இந்துக்களுக்கு மட்டுமே பணி” - கொளுத்திப்போட்ட போட்ட எச்.ராஜா...!
இந்து சமய அறநிலைத்துறை மூலம் கல்லூரிகள் கட்டுவது கூடாது என எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கல்வி நிறுவனங்களை தொடங்கலாமா, முருகன் மாநாடு நடத்தலாமா, இந்துக்கள் அல்லாதவர்கள் அதன் கல்வி நிலையங்களில் அனுமதிக்கப்படலாமா என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளை நடத்தலாமா? என்பது பெரும் விவாதமாக மாறியிருக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்பட்டு வரும் 25 பள்ளிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 22450 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். ஏழை, எளிய மாணவர்கள் இந்த கல்லூரிகளில் படித்து பலன் பெறுவதாகவும், இந்து சமய அற கொடைகள் கமிஷன் பரிந்துரையின் படியே கல்லூரிகள் நடத்தப்படுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து சமய அறநிலைத்துறை மூலம் கல்லூரிகள் கட்டுவது கூடாது எனக்கூறியுள்ளார். அதேபோல் இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அஜித் கஸ்டடி மரணம்... வீரியமெடுக்கும் பிரச்சனை... அதிமுக - பாஜக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
அஜித் குமார் மரணம் சம்பவத்தில் நிகிதா விசாரிக்கப்பட வேண்டியவர். அஜித் குமார் மரணம் சம்பவத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினார். நிகிதா விசாரிக்கப்படாதது, எஸ்பி கைது செய்யப்படாதது குறித்து சிபிஐயிடம் பாஜக புகார் மனு அளிக்கும் என்றார்.
எதிர்வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா? என கேட்டதற்கு என் மீது தலைமை நம்பிக்கை வைத்துள்ளது. தலைமை சொல்கிறபடி செய்வேன் என்றார். பாமக பிளவு குறித்து கேட்டதற்கு, ஒன்றாக இருந்தால் கண்ணுக்கு நன்றாக இருக்கும் என்றார்.
இதையும் படிங்க: மதிமுகவில் வெடித்தது பிரளயம்... துரோகி பட்டம் கட்டி அனுப்ப பாக்குறாரு... வைகோ மீது மல்லை சத்யா குற்றச்சாட்டு..!