×
 

“யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் ஆனால்...?” - விஜயை விடாமல் சீண்டும் நயினார் நாகேந்திரன்...!

யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் ஆனால், யார் நன்மை செய்வார்கள் என மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

புதியவர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் வரலாம் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் ஜனநாயகத்தில் அவர்களுக்கு உரிமையும் கடமையும் உள்ளது ஆனால் யார் நன்மை செய்வார்கள் என்று மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனால் பரபரப்பு. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற முழக்கத்துடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கள்ளக்குறிச்சியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தமிழையும் தமிழர் கலாச்சாரத்தையும் பிரதமர் மோடி அதிகம் நேசிப்பதால் அவருக்கு தமிழக மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. அதனை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழ், தமிழ் என திமுகவினர் பேச மட்டும் தான் செய்வார்கள். ஆனால் பாஜக சார்பில் காசியில் தமிழ்ச்சங்க விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தமிழர்களை வரவேற்பதற்காக பிரதமர் மோடி காசியில் காத்துக் கொண்டிருக்கிறார் என்றார். 

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதனை எதிர்த்து இன்று அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். இது பெரும்பான்மை சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறதா? இல்லையா? மற்ற பண்டிகைகளுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லும் திமுகவினர், தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார்கள் என கடுமையாக சாடினார். 

இதையும் படிங்க: "சேரக்கூடாத இடம் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தோல்வியே மிஞ்சும்" - நயினார் நாகேந்திரன் சாடல்...!

நாட்டின் நன்மைக்காக ஏற்பட்ட கூட்டணி, கஞ்சா இல்லாத பாலியல் இல்லாத லாக்கப் டெத் இல்லாத குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆன்மீகத்திற்கு எதிராக இருப்பவர்களை இதற்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றார். யாரையும் பாதுகாக்க முடியாத நிலையில் தமிழ்நாடு போலீஸ் உள்ளது. முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. ஒருகாலத்தில் கருணாநிதி சொன்னதை இன்று சொல்கிறோம். உங்கள் காவல்துறையின் ஈரல் புரையோடிப் போய்விட்டது. லாக் அப் மரணங்கள் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. மாணவர் முதற்கொண்டு தலைமையாசிரியர் வரை அனைவரும் கஞ்சா பயன்படுத்தி விட்டு பள்ளிக்கு வருகிறார்கள். ஆசிரியர்கள் மூலம் இன்றைக்கு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகமாகி விட்டன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.  

புதியவர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் வரலாம், யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் ஜனநாயகத்தில் அவர்களுக்கு உரிமையும், கடமையும் உள்ளது. ஆனால் மக்களுக்கு யார் நன்மை செய்வார்கள் என்று சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை மறைமுகமாக சாடி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்போது, டபுள் இன்ஜின் அரசு அமையும். மத்தியிலும் மாநிலத்திலும் நாம் ஆட்சி செய்கிற போது தமிழகத்திற்கு தேவையான அனைத்தும் வரும். புதியவர்கள் யார் வேண்டுமானாலும்  அரசியலுக்கு வரலாம். கட்சி  ஆரம்பிக்கலாம். ஆனால் மக்களுக்கு யார் நன்மை செய்வார்கள் என சிந்தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அதிமுக - பாஜக கூட்டணிக்கு பின்னடைவா? - நயினார் கொடுத்த ரியாக்‌ஷன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share