×
 

கோவை வடக்கு தொகுதியில் போட்டியா..?? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வானதி சீனிவாசன்..!!

அதிமுக-பாஜக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி பணிகளை செய்து வருகிறோம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும், பாஜகவின் தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தொகுதி மாறி கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்ற வதந்திகள் சமீபகாலமாக அரசியல் வட்டாரத்தில் அடிபடுகின்றன. 

இந்நிலையில், இன்று காலை கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட கணபதி பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வானதி சீனிவாசன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். தொகுதி மாற்றம் தொடர்பான கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

"கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுவதால் இங்கு அதிக கவனம் செலுத்துவதாக சொல்வது தவறு" என்று தெளிவுபடுத்தினார். பாஜகவும் அதிமுகவும் இணைந்த கூட்டணி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அனைத்து இடங்களிலும் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், இதற்கு முன்பும் அனைத்து தொகுதிகளிலும் கட்சி சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: "அமித்ஷாவை கண்டாலே ஸ்டாலினுக்கு நடுக்கம்! "முதல்வரை விமர்சித்த வானதி சீனிவாசன்! 

"இப்போதுதான் உங்களுக்கு தெரிகிறதா?" என்று சற்று நையாண்டியாகவும் கேட்டார். தனிப்பட்ட முடிவு எதுவும் இல்லை என்றும், தான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்றும் வலியுறுத்தினார். மேலும், முன்னாள் மாநில தலைவர் கே.அண்ணாமலை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது தனது ஆசை என்றும் தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து கேட்கப்பட்டபோது, "அவர் பேசியது ஒன்றும் புரியவில்லை. அதனால்தான் கோவை மக்கள் அவரை அனுப்பி வைத்தார்கள்" என்று கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தோல்வியடைந்துவிட்டதாகவும், வரும் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சி மற்றும் வானதியின் பதில்கள், கோவை மாவட்டத்தில் பாஜகவின் தேர்தல் உத்திகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். கட்சி தலைமையின் இறுதி முடிவு எதுவாக இருந்தாலும், வானதி சீனிவாசனின் செயல்பாடுகள் கூட்டணி வெற்றிக்கு முன்னுரிமை அளிப்பதை தெளிவுபடுத்துகின்றன.
 

இதையும் படிங்க: போதைப்பிடியில் தத்தளிக்கும் தமிழகம்... வெட்கக்கேடு..! வறுத்தெடுத்த வானதி MLA..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share