×
 

டிக் டிக் டிக்...! விழுப்புரம், பெரம்பலூர் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை..!!

தமிழகத்தில் உள்ள இரண்டு நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அண்மைக் காலங்களில் இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. 

இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். இதனால், ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை பெரும்பாலும் புரளிகளாக முடிவடைந்தாலும், இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு...!! - கோவை, சேலம், ஈரோட்டிற்கு குறி... மோப்ப நாயுடன் களமிறங்கிய சிறப்பு போலீஸ் படை...!

பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டலை அடுத்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். பெரும்பாலும் இது போன்ற மிரட்டல்கள் போலியானவையாக இருந்தாலும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. 

இதையும் படிங்க: மாணவி படுகொலையில் போலீசுக்கு அழுத்தம்... தவறான குற்றவாளிகள் சேர வாய்ப்பு..! கோர்ட் எச்சரிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share