டெல்லியில் தணியாத பதற்றம்... நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு..!
டெல்லியில் உள்ள நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்... பிரதமர் வீடு முற்றுகை... திட்டவட்டம்...!
டெல்லியில் உள்ள நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. சாகேத், பாட்டியாலா உள்ளிட்ட இடங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் சி ஆர் பி எஃப் வீரர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லியில் கார் வெடி விபத்து ஏற்பட்டு 15 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கோவை டூ டெல்லி கார் குண்டு வெடிப்பில் இப்படியொரு தொடர்பா?... தமிழகத்தின் பக்கம் பார்வையைத் திருப்பும் NIA...!