×
 

அதிரடி திருப்பம்... கை, கால்களைக் கட்டி 17 வயது சிறுவன் கொடூர கொலை... கைதானவர் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்..!

சோழவரம் அருகே 17 வயது சிறுவன் வீட்டில் கை, கால்கள், கட்டப்பட்டும் கழுத்து அறுத்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது. 

அண்ணியை கிண்டல் செய்ததால் நேர்ந்த விளைவு. அண்ணியின் நண்பருடன் 2மாதத்திற்கு முன் ஏற்பட்ட தகராறில் உருவான முன் விரோதம். காத்திருந்து வஞ்சம் தீர்த்த இளைஞர். சோழவரம் அருகே 17 வயது சிறுவன் வீட்டில் கை, கால்கள், கட்டப்பட்டும் கழுத்து அறுத்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது. 

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் பாபு (17). வெல்டிங் வேலை செய்து வந்த பாபு தமது குடும்பத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாடகை வீட்டிற்கு குடி வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் பாபுவின் பெற்றோர் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்த நிலையில் பாபு ஞாயிறன்று வீட்டிற்கு திரும்பி வந்து வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். ஞாயிறு இரவு முதல் பாபுவின் சகோதரர் தொலைபேசியில் அழைத்தபோதும் அதற்கு பதில் அளிக்காததால் திங்கள் காலை தனது நண்பரை அனுப்பி பார்க்க சொல்லி உள்ளார். வீடு பூட்டி இருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது 17 வயது சிறுவனான பாபு கை, கால்கள் கட்டப்பட்டு கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சோழவரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் இருந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த கொலை சம்பவம் குறித்து பாபுவின் சகோதரர் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்த சோழவரம் காவல்துறையினர், நண்பர்களிடையே கஞ்சா போதையில் கொலை சம்பவம் அரங்கேறியதா, கள்ளக்காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் அரங்கேறியதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். 

இதையும் படிங்க: “அச்சச்சோ...நெஞ்சே பதறுதே...” - 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை... ஷாக்கிங் காரணம்...!

இதனிடையே தங்களது குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாகவும், வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் கஞ்சா புகைப்பதற்காக தங்களது குடியிருப்பு பகுதிக்கு வருவதாகவும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பாபுவுடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

பாபுவின் அண்ணன் மனைவியின் நண்பன் தமது கூட்டாளிகளுடன் வந்து கொலையை அரங்கேற்றியது அம்பலமானது. பாபுவின் அண்ணன் செல்வகுமார் கடந்த 2 வருடங்களுக்கு முன் வேறு ஒருவருடன் திருமணமான ப்ரீத்தி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் ப்ரீத்தி செல்வகுமாரை 2வது திருமணம் செய்து 2பெண் குழந்தைகள் உள்ளனர். வீட்டில் யதார்த்தமாக 2வது திருமணம் செய்து வந்தவர் தானே என பாபு தனது அண்ணியை பார்த்து கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ப்ரீத்தி தனது தாயிடம் முறையிட்டு, குடும்ப நண்பரான அஜீத்திடம் தெரிவித்துள்ளனர். 2 மாதங்களுக்கு முன்பு, அஜீத் இது தொடர்பாக செல்வகுமார், பாபுவிடம் கேட்டபோது எங்களது குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம் என கூறியதோடு, வாக்குவாதம் முற்றி கைகலப்பாகவும் மாறியுள்ளது. 

இதில் அஜீத், செல்வகுமாரை தாக்கிய நிலையில், அண்ணனை அடிப்பதை பார்த்து ஆத்திரமடைந்த பாபு அங்கிருந்த கத்தியை எடுத்து அஜீத் தலையில் வெட்டியுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே முன்விரோதம் நீடித்து வந்துள்ளது. கடந்த ஞாயிறன்று பாபு வீட்டில் தனியாக இருப்பதை நோட்டம் பார்த்த அஜீத், தமது நண்பர்களுடன் சென்று பாபுவின் கை, கால்களை கட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றதை ஒப்பு கொண்டுள்ளார். இதனையடுத்து பெருமாள் அடிபாதம் பகுதியை சேர்ந்த அஜீத் (26), பழனி பாரதி (26), கௌதம் (22), காவங்கரையை சேர்ந்த பூவரசன் (26) ஆகிய 4பேரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். அண்ணியை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறின் முன் விரோதம் 17 வயது சிறுவன் கை கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்வதில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ரவுடி நாகேந்திரன் மரணம்... உடல் முன்பாக மகனுக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share