ஹாப்பி நியூஸ்..! வேளாண் பட்ஜெட்... இளைஞர்களை ஊக்குவிக்க மானியம்...! சட்டப்பேரவையில் அறிவிப்பு..!
வேளாண் துறையில் இளைஞர்களை தொழில் முனைவோராக உருவாக்க மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார். உழவர்களின் வாழ்வாதாரம், வருமானத்தை அதிகரிப்பதே அரசின் என்று தெரிவித்துள்ளார். 58 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டு இருப்பதாக கூறினார்.
10,588 சிறுபாசன குளம், ஊரணி, கால்வாய் தூர்வாரி மேம்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் உழவர்களுக்கு 53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் இயற்கை வேளாண் குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். நெல் ஜெயராமன் திட்டத்தில் 900 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
70,000 விவசாயிகளுக்கு நெல் விதைகள் வினியோகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். 482 கோடியில் குருவை சாகுபடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு 19.51 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 21.35 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றிருப்பதாகவும் கூறி உள்ளார்.
இதையும் படிங்க: நிதி தர மறுக்கும் மத்திய அரசு..! வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு... தங்கம் தென்னரசு பகிரங்க குற்றச்சாட்டு..!
482 கோடி ரூபாயில் குருவை சாகுபடி திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் 2025 - 26 ஆம் ஆண்டில் 12.48 லட்சம் ஏக்கரில் குருவை நெல் சாக்குப்படி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இளைஞர்களை வேளாண்மை துறையில் தொழில் முனைவோர் ஆக்க 4.56 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முக்கிய துறைகளுக்கு ரூ.11 கோடி கடன்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த நிதியமைச்சர்..!