என்னது WASTE- ஆ..? திமுக நடத்தியதே உதார் ஆட்சி..!! வெளுத்துவிட்ட தவெக..!!
பட்ஜெட்டை விமர்சித்த ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலடி கொடுத்துள்ளது.
2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முக்கிய கூட்டத்தொடர், தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை முன்வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது.சென்னையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது.
நிதியமைச்சர் என். மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அப்போது பல்வேறு துறைகளுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்பாக அறிவிக்கப்பட்டது. மேலும் முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்களும் அறிவிக்கப்பட்டன. திமுக தலைவர் ஸ்டாலின் பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் பதிலடி கொடுத்துள்ளது.
அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத் திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின், தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு அறிக்கை விட்டுள்ளார் என்று கூறியுள்ளது. மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் வரை தூங்கிவிட்டு அறிவித்ததை மறந்துவிட்டு ஸ்பீட் முதலமைச்சர் போல ஃபேக் நரேட்டிவ் செய்ய முற்படுகிறார் என விமர்சிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மாற்றமா.? கடனுக்கு வழியா..? கேள்விக்குறியான பட்ஜெட்..! வேல்முருகன் சரமாரி கேள்வி.!!
ஆட்சி முடியும்போது அவசர அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கப்படப் போவதைப்பொறுக்காமல் சொந்தமாக யோசிக்கத் தெரியாத அரசு தன் அரசு என்பதை சுரத்தே இல்லாமல் ஒரு சூப்பர் சொதப்பல் அறிக்கை விட்டிருக்கிறார் என விமர்சிக்கப்பட்டு உள்ளது. எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார் என கூறியுள்ளது.
இதையும் படிங்க: முதல் பட்ஜெட்டுடன் களமிறங்கும் தவெக அரசு..!! வெளியாகுமா புதிய அறிவிப்புகள்? எதிர்பார்ப்பில் தமிழகம்..!!