பொய் பேசுறத நிறுத்துங்க! உங்க அண்ணன்கிட்ட கேளுங்க! கனிமொழிக்கு அண்ணாமலை அதிரடி ரிப்ளை!!
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்து விமர்சித்த திமுக எம்பி கனிமொழிக்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசின் 2026-27 பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரயில்வே நிதி ஒதுக்கீடு குறித்து திமுக எம்பி கனிமொழி கடும் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பட்ஜெட் அறிவிப்புகளுக்கு பிறகு எழுந்த இந்த வார்த்தைப் போர் தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது.
கனிமொழி தனது அறிக்கையில் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தமிழகத்திற்கு மஹாராஷ்டிராவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான தொகையே வழங்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு தமிழக மக்களின் ஓட்டுக்களே முக்கியம், அவர்களின் வளர்ச்சி அல்ல என்று கடுமையாக சாடினார். இது திமுக தரப்பில் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களை தீவிரப்படுத்தியது.
இதற்கு அண்ணாமலை உடனடியாக பதிலளித்தார். தனது அறிக்கையில் அவர் கூறியதாவது: கனிமொழி உண்மை தெரியாமல் பேசுகிறார். அவரது சகோதரரும் முதல்வருமான ஸ்டாலினின் ஊழல் ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதுகூட அவருக்கு தெரியவில்லை. தமிழகத்தில் தற்போது ரூ.35,701 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: திமுகவின் மூன்றாவது மெகா ஊழல்!! EDயிடம் சிக்கிய குடுமி! ரூ.367 கோடி அபேஸ்!! அலசிய அண்ணாமலை!!
ஆனால் திமுக அரசு நிலம் கையகப்படுத்தாததால் இத்திட்டங்கள் தாமதமாகின்றன. தேவையான 4,326 ஹெக்டேர் நிலத்தில் 2025 டிசம்பர் வரை வெறும் 24% மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக பல திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இதே நிலை தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் உள்ளது.
திமுக அரசு ஊழல் காரணமாக திட்டமிட்டே முட்டுக்கட்டை போடுகிறது. பொய் பிரசாரத்தை விட்டுவிட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த ஏன் தாமதம் என்று உங்கள் சகோதரரிடம் கேளுங்கள் என்று அவர் கடுமையாக சாடினார்.
அண்ணாமலையின் இந்த பதிலடி திமுகவை திணறடித்துள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு எதிராக, மாநில அரசின் செயல்பாட்டின்மையை சுட்டிக்காட்டியுள்ளார். இது தேர்தல் களத்தில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. திமுக தரப்பிலிருந்து இதற்கு பதிலடி வருமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு!! உதவி கமிஷனர் மாற்றத்தால் திமுக கவுன்சிலர்கள் திக்! திக்!!