எகிறிய ஹைப்..!! கார் ரேஸில் தூள் கிளப்பிய அஜித் அணி..!! 3ம் இடம் பிடித்து அசத்தல் வெற்றி!!
ஆனால் திடீரென கார் டிராக்கிலிருந்து விலகி பக்கவாட்டில் சென்று விபத்திற்குள்ளானது.
முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வ பயணமாக இங்கிலாந்து சென்றிருந்த வேளையில், தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதுடன் சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்தார். இந்தப் பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, லண்டனில் நடைபெற்ற மிச்செலின் லே மான்ஸ் தொடர் போட்டியை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நடிகர் அஜித் குமாரின் அணி பங்கேற்ற இந்தப் போட்டி, தமிழக அரசியல் மற்றும் திரைத்துறை உலகங்களை ஒன்றிணைத்த அரிய தருணமாக அமைந்தது. நேற்று இரவு சுமார் 9 மணியளவில் லண்டன் பந்தய மைதானத்தில் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அஜித் குமாரைக் கண்டதும் விஜய் ஓடிச் சென்று ஆரத்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். இதற்கு அஜித் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து போட்டியை ரசித்தார். நடிகை திரிஷாவும் அதே இடத்திற்கு வருகை தந்து பந்தயத்தை கண்டுகளித்தார். இந்த வரவேற்பு நிகழ்வு பார்வையாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சென்னையிலும் சில்வர்ஸ்டோன் போன்ற ரேஸிங் டிராக்.. முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ரேசர் அஜித்குமார்!
LMP3 Pro/Am பிரிவில் ‘Ajith RedAnt by Virage’ அணியின் சார்பாக 16-ஆம் எண் கொண்ட லிஜியர் பந்தயக் காரை இயக்கிய அஜித் குமார், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அனுபவமிக்க பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக்குடன் இணைந்து பங்கேற்றார். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தப் போட்டியில் மொத்தம் 44 கார்கள் பங்கேற்றன. பந்தயம் தொடங்கியதும் அஜித்தின் கார் சீராக முன்னேறி வந்தது. ஆனால் திடீரென கார் டிராக்கிலிருந்து விலகி பக்கவாட்டில் சென்று விபத்திற்குள்ளானது.
உடனடியாக மீட்புக் குழுவினர் தலையிட்டு காரை சீரமைத்தனர். இதற்குப் பிறகும் அஜித்தின் அணி தனது திறமையை வெளிப்படுத்தி மூன்றாம் இடத்தைப் பிடித்தது. இந்த வெற்றி, நடிகர் அஜித் குமாரின் சர்வதேச பந்தய வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. முதலமைச்சர் விஜயின் வருகையும் ஆதரவும் அணிக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்ததாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டின் இளம் முதலமைச்சர் சர்வதேச அரங்கில் விளையாட்டு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயும் இந்தப் பயணம், மாநிலத்தின் புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளது. அஜித் அணியின் இந்த சாதனை, தமிழக திரைத்துறை கலைஞர்கள் உலக அளவிலான போட்டிகளில் தங்கள் திறமையை நிலைநிறுத்தும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தவெக கூட்டணி பெயர் அறிவிப்பு: 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' தலைவராக முதல்வர் விஜய் தேர்வு!