×
 

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

த.வெ.க., பிரசார கூட்ட வழக்கு தொடர்பான, குற்-றப்பத்திரிகையை வரும், 12க்குள் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டத்தில் நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் கலந்து கொண்டிருந்தார்.

முதலில் கரூர் டவுன் போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த் விசாரணை மேற்கொண்டார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு குழு விசாரித்தது. ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட்டது.

இதன்படி சிபிஐ எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையிலான குழு விசாரணையை தொடங்கியது. கரூர் கலெக்டர் அலுவலக அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் தற்காலிக சிபிஐ அலுவலகம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: நான் கிங் மேக்கரா? போராடி ஜெயிப்பேன்! கரூர் முதல் ஜனநாயகன் வரை விஜய் Open Talk!

சிபிஐ அதிகாரிகள் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி. ஜோஷ் தங்கையா, ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த், டவுன் டி.எஸ்.பி. செல்வராஜ் போன்ற அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தோர், பவர் கிரிட் ஊழியர்கள், டாக்டர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வீடியோகிராபர்கள், உள்ளூர் கடைக்காரர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் என பலரிடமும் விசாரணை நடந்துள்ளது.

கடந்த நவம்பர் 13-ம் தேதி வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. சமீபத்தில் விஜய் புதுடில்லி சிபிஐ அலுவலகத்துக்கு இரண்டு முறை அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவரது பிரசார வாகனமும் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டது.

தற்போது சிபிஐ அதிகாரிகள் இரவு பகலாக ஆவணங்களை தயார் செய்து வருகின்றனர். வரும் 12-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் எப்.ஐ.ஆரில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது. சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூடுதல் பெயர்கள் சேர்க்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும். இந்த வழக்கு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புலி வாலை புடிச்சிட்டோமோ!! கலக்கத்தில் விஜய்!! ஸ்டாலின் கூட இப்படி பண்ண மாட்டாரு!! தவிக்கும் தவெக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share