×
 

எனக்கு வேற வழி தெரியலம்மா... மகளின் தலையில் சிசிடிவி வைத்த தந்தை... வைரலாகும் வீடியோ..!!

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றத்தால் மகளின் தலையில் சிசிடிவி வைத்து அனுப்பும் தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை எண்ணற்ற பாலியல் குற்றங்கள் நடந்து வருவது பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்புவதே அச்சமூட்டும் வகையில் இருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர். பிஞ்சு குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் மனதை உலுக்குகிறது. இரண்டு வயது குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை வயது வித்தியாசம் பாராமல் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. 

குற்றச் சமங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் ஏற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கல்லூரிக்கு செல்லும் தனது மகளுக்கு தந்தை ஒருவர் தலையில் முன்னும் பின்னும் சிசிடிவி கேமரா மாட்டி இருக்கிறார். பத்திரமாக காலேஜ் போய்விட்டு வரணும்… பேட்டரி ஃபுல்லா சார்ஜ் போட்டு பையில் வைத்திருக்கிறேன்… நீ போயிட்டு வர வரைக்கும் அப்பா போனில் பார்த்துக் கொண்டே இருப்பேன்… பாதுகாப்பா போயிட்டு வாம்மா என்று அவரது மகளுக்கு அறிவுரை கூறும் வகையில் அந்த வீடியோ அமைந்திருந்தது.

இது தொடர்பாக அருகில் இருக்கும் ஒருவர் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அதனால் தான் இதுபோல சிசிடிவி கேமரா வைக்கும் நிலை வந்து விட்டதாகவும் தெரிவித்தார். உனது மகன் சிறு வயதில் திருடியதாக சொன்ன போது அறியாத வயதில் தெரியாமல் செய்து விட்டான் என்று விட்டாய் அல்லவா அதனால் தான் இன்று அவன் ஏடிஎம்மில் கொள்ளை அடித்து சிறையில் இருக்கிறான் என்றும் குற்றங்களை முறையாக கண்டிக்கவில்லை என்றால் பெரிய அளவில் குற்றங்கள் நடைபெறும் எனவும் அந்த தந்தை கூறும் வகையில் வீடியோ அமைந்திருந்தது.

இதையும் படிங்க: மீண்டும் ஒரு கொடுமை..! 6 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு..! வலைவீசி தேடி வரும் போலீஸ்..!

அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் நடக்கும் பல்வேறு குற்ற சம்பவங்களை எடுத்துச் சொல்லும் வகையில் வழி கேட்பது போல் பெண்களின் கழுத்தில் இருந்து நகையை திருடி செல்வதும் இயற்கை உபாதைக்காக சென்ற பெண்ணை கொலை செய்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதையும் அந்த வீடியோவை சுட்டிக்காட்டி உள்ளார். எந்த அளவுக்கு பெண்களின் பாதுகாப்பு இருப்பதை எடுத்துரைக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்திருந்தது. சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: வடமாநில மாணவிக்கு நேர்ந்த கொடூரம்... தேர்வுக்கு உதவுவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share