×
 

இந்தியா - பாக். பதற்றம்; இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.. டிவி சேனல்களுக்கு அதிரடி உத்தரவு!!

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் அனைத்து டிவி சேனல்களுக்கும் செய்யக்கூடாதவை குறித்து மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.  இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியா மீது மீண்டும் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது.

நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.  பாகிஸ்தான் 50க்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்த டிரோன் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. 50க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிக்கப்பட்டன.  இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகள், ராணுவ நடவடிக்கை தொடர்பான நேரடி ஒளிபரப்பு, நேரடி செய்தி வெளியீடுகளைத் தவிர்க்க வேண்டுமென ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு படைகளின் இயக்கம் தொடர்பான நேரடி தகவல், வீடியோ அல்லது கிடைத்த அடிப்படையிலான தகவல்களை வெளியிடக் கூடாது என எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காக கொண்டு இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் நடத்தியது.

இதையும் படிங்க: இந்திய ராணுவம் உங்களை அவ்வளவு சீக்கிரமா விட்டுவிடாது.. அசீம் முனீருக்கு பீதியை கிளப்பும் வார்னிங்!!

இதனையடுத்து பாகிஸ்தான், இந்திய எல்லை பகுதிகளில் டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளும் மோதிக்கொண்டு வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நேரடி ஒளிபரப்புகள், சமூக ஊடக பதிவுகள் மூலம் ராணுவத்தின் நடவடிக்கைகள் வெளிப்படையாக தெரிய வந்தால், எதிரி நாடுகள் அதைப் பயன்படுத்தி இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்க வாய்ப்பு உள்ளது.

இதனையடுத்து, கேபிள் தொலைக்காட்சி விதிகள், 2021 - விதி 6(1)(p)-ன் படி தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், பாதுகாப்பு படைகள் மேற்கொள்ளும் எந்தவொரு எதிர் தீவிரவாத நடவடிக்கைகளையும் நேரடியாக ஒளிபரப்பக் கூடாது. இத்தகவலை அவர்களாகவே அடிக்கடி அறிவிக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முந்தைய சம்பவங்களான கார்கில் போர், மும்பை தாக்குதல், மற்றும் கந்தகார் விமான கடத்தல் போன்றவைகளில் நேரடி ஊடக ஒளிபரப்புகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தின.

இதுபோன்ற நேரடி ஒளிபரப்புகள் எதிரிகள், பாதுகாப்பு படை தொடர்பான புரிந்து கொள்ள உதவியதை மத்திய அரசு நினைவுபடுத்தியுள்ளது. மேலும், ராணுவ நடவடிக்கைகள், பாதுகாப்பு படைகள் இயக்கம் தொடர்பான நேரடி ஒளிபரப்பு, சமூக ஊடகங்களில் நேரடி வீடியோ பதிவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதிகாரப்பூர்வமான தகவல்கள் மற்றும் விளக்கங்களை மட்டுமே அதிகாரிகள் வெளியிடுவர்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முந்தைய அனுபவங்களை நினைவில் கொண்டு, ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். விதிகளை மீறு கேபிள் தொலைக்காட்சி விதிகள், 2021 - விதி 6(1)(p) ஐ மீறும் தொலைக்காட்சி சேனல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பாதுகாப்பாக நிறைவேற்ற ஊடகங்கள், சமூக ஊடக பயனர்கள் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெங்களூருவில் தயாரிக்கப்பட்ட தற்கொலை படை ட்ரோன்.. சிக்கி சின்னபின்னமாகி வரும் பாக்.,!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share