×
 

கலிஃபோர்னியாவில் இந்து கோயில் அவமதிப்பு தாக்குதல்: மத்திய அரசு கண்டனம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்து கோயிலான ஸ்ரீ ஸ்வாமிநாராயணன் கோயில் மீது  அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

கலிஃபோர்னியாவின் சினோ ஹில்ஸ் பகுதியில் இந்துக்கள் வழிபடும் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயில் இருக்கிறது. இந்த கோயிலில் அடையாளம் தெரியா நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தி, அவமதிப்பு செய்துள்ளனர்.

ஸ்வாமிநாராயண் கோயில் அமைப்பான பிஏபிஎஸ் எக்ஸ்தளத்தில் பதிவிட்டகருத்தில் “ அடையாளம் தெரியா நபர்கள் சிலர் ஸ்ரீ ஸ்வாமி நாராயண் கோயிலை அவமதிப்பு செய்து, தாக்குதல் நடத்தினர். இந்த வெறுப்புச் சம்பவத்துக்கு எதிராக இந்துக்கள் திரண்டு நிற்கிறார்கள். சினோ ஹில்ஸ், தெற்கு கலிஃபோர்னியா மக்கள் ஒருபோதும் இந்த வெறுப்பு வழியை கையில் எடுக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஸ்வாமி நாராயண் கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ஸ்வாமி நாராயண் கோயில் அமவமானப்படுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: நீங்கள் காங்கிரஸின் செயல்படா சொத்து - ராகுல் காந்தியின் பேச்சால் பாஜக ஆத்திரம்! 

அதற்கு ரன்திர் ஜெய்ஸ்வால் அளித்த பதிலில் கூறுகையில் “ அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்ரீ ஸ்வாமி நாராயண் கோயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி அவமதிப்பு செய்துள்ள செய்தி அறிந்தோம். ஏற்க முடியாத இந்தசெயல்பாடுகளை இந்திய அரசு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த கோயிலுக்கு உள்ளூர் நிர்வாகம் போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும், சட்டத்தை நிலைநிறுத்தும் அதிகாரிகள் இந்த செயல்பாடுகளுக்கு காரணமானவர்களைத் தேடிப்பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மிஸ்டர் அண்ணாமலை எல்லாத்துக்கும் காரணம் நீங்க! விளாசிய சசிகாந்த்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share