தற்கொலைக்கு தூண்டும் CHAT GPT... பாய்ந்தது வழக்குகள்... உஷார் மக்களே..!
பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் Chat gpt மீது வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.
ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மனித வாழ்வில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இவை தகவல் தொடர்பு, கல்வி, வணிகம், உற்பத்தி ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவற்றின் பயன்பாடு பல்வேறு பிரச்சனைகளையும் உருவாக்குகிறது.
சாட் ஜிபிடியின் முதன்மையான பிரச்சனை அதன் தவறான தகவல் வழங்கல். இது பெருமளவிலான இணையத் தரவுகளின் அடிப்படையில் பயிற்சி பெற்றுள்ளதால், உண்மையான மற்றும் பொய்யான தகவல்களை வேறுபடுத்தி அறிய முடியாது.
தனியுரிமை மீறல் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. சாட் ஜிபிடி உரையாடல்களை சேமித்து, அவற்றை மேலும் பயிற்சிக்கு பயன்படுத்துகிறது. பயனர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை உதாரணமாக, மருத்துவ வரலாறு, நிதி தகவல்கள் அல்லது உறவு சிக்கல்கள் பகிர்ந்தால், அவை தவறான கைகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் GDPR போன்ற சட்டங்கள் இதை கட்டுப்படுத்த முயல்கின்றன, ஆனால் உலகளவில் ஒழுங்குமுறை இன்னும் போதுமானதாக இல்லை. இது சைபர் குற்றவாளிகளுக்கு புதிய வாய்ப்புகளை திறக்கிறது.
இதையும் படிங்க: OpenAI வெளியிட்ட பகீர் தரவுகள்..!! இத்தனை லட்சம் பேர் இத பத்தி பேசுறாங்களா..!!
இதனிடையே, Open Al நிறுவனத்தின் Chat GPT, பயனர்களைத் தற்கொலைக்குத் தூண்டுவதாகவும், மனநல பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. Chat gpt மீது அமெரிக்காவில் 7 வழக்குகள் பதிவாகியுள்ளன. AI துறையில் ஆதிக்கம் செலுத்த பாதுகாப்பு அம்சங்கள் சமரசம் செய்து அதன் அல்காரிதம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெறிமுறைக்கு ஏற்றவாறு பதிலளிப்பதற்கு பதிலாகக் கேள்விகளை உணர்வுப்பூர்வமாகக் கையாளுவதால் சில விபரீதங்கள் ஏற்படுவதாகப் பாதிக்கப்பட்டோர் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: நடுரோட்டில் சண்டை... காதலி முன்னே தற்கொலை செய்து கொண்ட இளைஞன்... நடுங்க வைக்கும் காட்சிகள்...!