×
 

சிவசேனா நிர்வாகி; சிறையில் ஏற்பட்ட கூடா நட்பு... 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்களின் பகீர் பின்னணி...!

மதுராந்தகம் அருகே 17 வயது சிறுவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 14 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இரு காமக்கொடூரர்கள் கைது. சிறையில் இருந்த போது பழக்கம் ஏற்பட்டு  சிறையில் வெளியே வந்த கஞ்சா போதை ஆசாமிகள் செய்த கொடூரம்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது  சிறுவன், கடந்த 9-ஆம் தேதி அன்று நள்ளிரவில் 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுமிகளை தனது இருசக்கர வாகனத்தில் மதுராந்தகம் அருகே உள்ள கீழக்கண்டை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அவர்கள் தேவத்தூர் வழியாகச் சென்றபோது, மதுபோதையில் இருந்த மர்ம நபர்கள் இருவர் அவர்களைத் பின்தொடர்ந்துள்ளனர்.

இதைப் பார்த்து பயந்துபோன சிறுவன், இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியபோது, அத்திவாக்கம் பகுதியில் வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர்கள் சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது 17 வயது சிறுவன் தன்னுடன் வந்த 14-வயது சிறுமியை விட்டு விட்டு 16 வயது சிறுமியை மட்டும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளான். 

இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்ட இரு மர்ம நபர்கள், காயமடைந்த 14 வயது சிறுமியைத் தூக்கிக்கொண்டு அருகில் இருந்த அத்திவாக்கம் ஏரிப் பகுதிக்குச் தூக்கிச் சென்று, அங்கு சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரவு முழுவதும் அங்கே பாலியல் சித்திரவதைக்கு உள்ளான சிறுமி, அதிகாலையில் மிகுந்த சிரமத்திற்கு இடையே அதே பகுதியை சேர்ந்த ஒரு சிலரின் உதவியுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: பரிகார பூஜை லீலைகள்... சிறுமிகளை சீரழித்த ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை... சிவகங்கை நீதிமன்றம் அதிரடி....!

மருத்துவரிடம் சிறுமி நடந்த விவரங்களைக் கூறியதையடுத்து, மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர். அப்போது சம்பவம் நடந்த நேரத்தில் அத்திவாக்கம் ஏரி பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் கண்டறியப்பட்டும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் போலீசார் ஆவடி அருகே பதுங்கி இருந்த கூடுவாஞ்சேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான பாலாஜி என்கிற காக்கா பாலாஜியை நேற்று கைது செய்தனர். இவன் மீது கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகளும், 'ஏ' கேட்டகிரி ரவுடியாக கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் வலம் வந்துள்ளார்.

மேலும் பாலாஜி கடந்த ஜனவரி மாதத்தில் கூடுவாஞ்சேரி மதுபான கடை ஒன்றில் மது அருந்த வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசியும் வீடியோ எடுத்த செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியது. 

பின்னர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய கூடுவாஞ்சேரி போலீசார் அவனை செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த பாலாஜி என்கிற காக்கா பாலாஜி 14 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை அளித்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் காக்கா பாலாஜி அளித்த தகவலின் அடிப்படையில் தன்னுடன் 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் மாரிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்கிற தாமோதர பெருமாள் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.‌இவர் சிவசேனா கட்சியின் இளைஞர் அணியில் ஒன்றிய பொறுப்பாளராக உள்ளார்

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவிலில் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தாமோதர பெருமாள் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் இருந்த போது காக்கா பாலாஜியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னர், குற்ற சம்பவங்களில் ஈடுபட முடிவெடுத்து சம்பவ தினத்தன்று மதுராந்தகம் அருகே இருவரும் கூட்டாக மது அருந்தி வந்துள்ளனர். 

அப்போது நள்ளிரவு நேரத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்களுடன் சிறுவன் செல்வதை கண்டு அவர்களை பின்தொடர்ந்து சென்று வாகனத்தை நிறுத்துமாறு அச்சுறுத்தி உள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த சிறுவன் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றபோது வாகனம் நிலை தடுமாறு கீழே விழுந்துள்ளது. அப்போது சிறுவனை பலமாக தாக்கிய காக்கா பாலாஜி மற்றும் தாமோதர பெருமாள் ஆகியோர் அதில் 14 வயது சிறுமியை மட்டும் அத்திவாக்கம் ஏரி பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இந்நிலையில் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை தற்போது நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இருவரையும் மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைக்க உள்ளனர். தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இது போன்ற நபர்களை காவல்துறையினர் கண்காணித்து அவர்கள் மீது உள்ள வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

போலீசார் சரிவர குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாமல் இருப்பதால் நீதிமன்ற பிணையிலிருந்து வெளியில் வரும் இது போன்ற நபர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் சம்பவம் நடைபெற்ற இடம் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதாலும், இரண்டு காவல் நிலைய எல்லைகளுக்கு இடையே இந்த பகுதி இருப்பதன் காரணமாக போலீசாரின் ரோந்து பணி இந்த பகுதியில் இல்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதையும் படிங்க: சென்னை பார்க் ஸ்டேஷனில் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கும் போராட்டம்... மின்சார ரயில் மீது பாய்ந்த நபரால் பரபரப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share