சென்னை ரேஸ் கோர்ஸ் கிளப் வழக்கு... தனி நீதிபதி உத்தரவுக்கு தடை! தமிழக அரசுக்கு கிரீன் சிக்னல்...!
சென்னை ரேஸ்கோர்ஸ் கிளப் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி ரேஸ் கிளப்க்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை எதிர்த்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கு 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை அரசு கட்டுப்பாட்டுக்குள் எடுக்கலாம், அந்த நிலத்தை அரசு பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, சென்னை கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பசுமைவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பில் மழை நீரை சேமிக்க நான்கு குளங்கள் என மழைநீர் சேகரிப்பு திட்டமும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டங்களை அமல்படுத்துவதை எதிர்த்தும், நிலத்தை அரசு சுவாதீனம் எடுத்ததை எதிர்த்தும் ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதையும் படிங்க: கெடு விதித்த நீதிமன்றம்... வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசின் வியூகம்... நவ.6ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்...!
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை ரத்து செய்து, பொதுநலன் கருதி திட்டங்களை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீண்டும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதையும் படிங்க: அச்சப்பட வேண்டாம்... வேலை தரமா இருக்கும்..! தேர்தல் ஆணையம் உறுதி...!