×
 

பயங்கரவாதிகளை களையெடுத்து வருகிறோம்! ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

பயங்கரவாதிகளையும், பயங்கரவாதத்திற்கு நிதி உதவி கொடுப்பவர்களையும் களை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) 2001 ஆம் ஆண்டு சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் தொடங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த அமைப்பில் முழு உறுப்பினர்களாக இணைந்தன. தற்போது, இந்த அமைப்பில் பத்து உறுப்பு நாடுகள் உள்ளன, மேலும் பல நாடுகள் பார்வையாளர்களாகவும், கூட்டாளிகளாகவும் பங்கேற்கின்றன.

இந்த மாநாடு பிராந்திய ஸ்திரத்தன்மை, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளுதல் போன்ற முக்கிய பிரச்சினைகளை மையப்படுத்தியது. இந்த நிலையில், சீனாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்த இந்த பயணம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, உலக அமைதிக்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் காரணமாக 40 ஆண்டுகளாக இந்தியா பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டு பேசினார். காஷ்மீரின் பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனிதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

இதையும் படிங்க: பிதற்றிக் கொள்வதைத் தவிர ஒன்றுமே செய்யவில்லை! அமெரிக்க வரி விதிப்பை சுட்டிக்காட்டி விஜய் குற்றச்சாட்டு

தொடர்ந்து பேசிய பிரதமர், பாதுகாப்பு, ஒருங்கிணைப்பு போன்றவற்றிற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கேட்டுக்கொண்டார். மேலும், பயங்கரவாதிகளையும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்முறை கண்டறிந்து களை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: பிரதமர் சொல்றது சரிதான்... சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை கொடுப்போம்! - நயினார் நாகேந்திரன்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share