×
 

பாக்., சீனா கைகோர்ப்பு!! 75 ஆண்டுகால தூதரக உறவு!! கையெழுத்தானது 3 முக்கிய ஒப்பந்தங்கள்!!

நம் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான துாதரக உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.

சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தூதரக உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார்.

அவரது பயணத்தின் போது, சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் பாகிஸ்தானை புகழ்ந்து பேசினார். “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வளர்ந்து வருகிறது. பாகிஸ்தான் எல்லா காலத்திற்கும் ஏற்ற நண்பன் (All-Weather Friend)” என்று அவர் வலியுறுத்தினார்.

அதிபர் சர்தாரி சீனாவின் ஹுனான் மற்றும் ஹைனான் மாகாணங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளும் மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. 

இதையும் படிங்க: "VINTAGE" பொருட்களை கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின்..! பழமையான கார்களுடன் புகைப்படம்..!

இந்த ஒப்பந்தங்கள் கராச்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், விவசாயத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் தேயிலை உற்பத்தி துறைகளில் கவனம் செலுத்துகின்றன. இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவு “எல்லா காலத்திற்கும் ஏற்ற நட்பு” (All-Weather Strategic Cooperative Partnership) என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் மிக முக்கியமான அண்டை நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்படுகிறது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (BRI) திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் செயல்படுத்தப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) இரு நாடுகளின் உறவில் முக்கிய அங்கமாக உள்ளது.

அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று இரு தரப்பும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. குறிப்பாக கடல் நீர் குடிநீராக்கும் திட்டம், பாகிஸ்தானின் குடிநீர் பிரச்சினைக்கு பெரும் உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

75 ஆண்டுகால நட்புறவை நினைவுகூரும் வகையில் நடைபெறும் இந்தப் பயணம், சீனா-பாகிஸ்தான் உறவின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 

இதையும் படிங்க: பாக்., நல்ல நண்பன்தான்!! ஆனா.. மத்தியஸ்தம் பண்ண தகுதி இருக்கா?! அமெரிக்காவுக்கு சாதகமாக பேசுவதாக புகார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share