×
 

நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களுடன் சரக்கு விமானம் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களுடன் சரக்கு விமானம் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலை சீனா  திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் வலைதளத்தில் இன்று பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘சீன ராணுவம் திங்களன்று தனது மிகப் பெரிய ராணுவ சரக்கு விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு ஆயுத தளவாடங்களை எடுத்துச் சென்றதாக வெளியான செய்தி உண்மையல்ல.

மக்கள் விடுதலை ராணுவ விமானப் படை (PLAF), அதன் சியான் Y-20 ராணுவ போக்குவரத்து விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களை எடுத்துச் சென்றதாக வெளியான செய்தி உண்மையும் அல்ல. இத்தகைய அறிக்கைகள் உண்மைக்குப் புறம்பானவை. இணையச் சட்டத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. ராணுவம் தொடர்பான வதந்திகளை உருவாக்கி பரப்புபவர்கள் சட்டபூர்வமாக பொறுப்பேற்கப்படுவார்கள்" என்று அந்தத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!



இந்தியா உடனான மோதலை அடுத்து, பாகிஸ்தான் ராணுவ ரீதியாக பெரும் இழப்பைச் சந்தித்துள்ள நிலையில், அது அவசரமாக ராணுவ தளவாடங்களைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால், பாகிஸ்தானுக்கு உதவ அதன் நட்பு நாடான சீனா முன்வந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே, ராணுவ உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சீனா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும்  'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டபோது இந்தத் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவாக இருந்ததற்கு பாகிஸ்தான் பிரதமர் சீனாவுக்கு நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share