×
 

தைவானுடன் கைகுலுக்கிய ட்ரம்ப்! வேலையை காட்டிய சீனா! அமெரிக்காவின் 20 நிறுவனங்களுக்கு அதிரடி தடை!

தைவானுக்கு ஆயுதங்கள் விற்க ஒப்பந்தம் போட்டதால், அமெரிக்காவின், 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது.

சீனா தனது பிரிக்க முடியாத பகுதி என்று கூறி உரிமை கொண்டாடும் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்ததால், இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா தைவானுடன் 99,822 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தம் செய்துகொண்டது. 

இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவின் 20 பாதுகாப்பு மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது. அத்துடன் அந்த நிறுவனங்களைச் சேர்ந்த 10 உயரதிகாரிகளுக்கும் சீனாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தைவான் பிரச்னை பல ஆண்டுகளாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முக்கியமான மோதல் புள்ளியாக உள்ளது. தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் அமெரிக்கா, அந்நாட்டுக்கு ஆயுத உதவி அளித்து வருகிறது. இது சீனாவை ஆத்திரமூட்டுவதாக அந்நாடு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தற்போதைய ஆயுத ஒப்பந்தம் சீனாவின் “ஒரே சீனா” கொள்கையை மீறுவதாக சீன வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தைவானை சுத்துப்போட்ட சீனா! விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைப்பு! கிழக்காசியாவில் பதட்டம்!

சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தைவான் பிரச்னையில் ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சீனாவின் உறுதியான பதிலடி கிடைக்கும். அமெரிக்கா ஒரே சீனா கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். தைவானுக்கு ஆயுதம் வழங்கும் ஆபத்தான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட 20 அமெரிக்க நிறுவனங்கள் பெரும்பாலும் சீனாவுடன் நேரடி வர்த்தகம் செய்யவில்லை என்பதால், இந்த தடை அமெரிக்காவுக்கு அடையாள ரீதியான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று உலக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தைவான் தனது பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்காவின் ஆயுத உதவியை நம்பியுள்ள நிலையில், சீனா தொடர்ந்து இராணுவ அச்சுறுத்தலை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவின் ஆயுத விற்பனை தைவானுக்கு உறுதுணையாக இருந்தாலும், பிராந்திய அமைதிக்கு சவாலாகவும் அமைந்துள்ளது. இந்த தடை நடவடிக்கை சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை உலகுக்கு தெரிவிப்பதாக உள்ளது.

இதையும் படிங்க: இந்தியா - சீனா இடையே பகையை வளர்க்க திட்டம்! கோள் மூட்டும் அமெரிக்கா! மூக்குடைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share