“உங்க குடும்பத்துல ஒருத்தனா சொல்லுறேன்”- ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு உரிமையோடு அழைப்பு விடுத்த ஸ்டாலின்..!
உங்கள் சகோதரன் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் முதலீடு செய்யுங்கள் என அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று ஜெர்மன் சென்றடைந்தார். டசெல்டோர்ஃப் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெர்மன் நாட்டு அரசு அதிகாரிகளும், தூதரக அதிகாரிகள் மற்றும் ஜெர்மனி வாழ் தமிழ் மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொள்ளும் அயலக தமிழர்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டு தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். தமிழ்நாட்டுக்கு வாருங்கள், தமிழக அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டு சின்னங்களை காணுங்கள். உங்கள் சகோதரன் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் முதலீடு செய்யுங்கள் என அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உலகத்தின் எந்த இடத்திற்கு போனாலும் அங்கு தமிழன் இருப்பான். திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பின் தொழில் துறையில் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என பெருமிதத்துடன் தெரிவித்தார். கண்டங்கள் கடந்து விட்டாலும் நம் தொப்புள் கொடி உறவு மாறாது.. உலகில் எங்கு போனாலும் தமிழன் இருப்பான். வேர்களை மட்டும் மறக்காதீங்க.. உங்கள் குடும்பத்தில் ஒருத்தனாக நான் இருக்கிறேன். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என அழைப்புவிடுத்தார்.
இதையும் படிங்க: “விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” - தவெகவை நோஸ்கட் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
இதனைத் தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) முதலமைச்சர் டசெல்டோர்ஃபில் உயர்நிலை முதலீட்டாளர் மாநாட்டிற்குதலைமை ஏற்று, உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடுவார். இந்த நிகழ்வின் போது முக்கிய முதலீட்டு அறிவிப்புகள் மற்றும் புரிந்துணர்வு ஒபந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வெளிநாடு பயணம் ஏன்? - பக்காவாக புள்ளி விவரங்களை சொல்லி வாயடைக்க வைத்த முதல்வர்...!