×
 

விடிந்ததுமே களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்... வேளச்சேரி, சோழிங்கநல்லூரில் “வாக்கிங்” பிரசாரம்...!

முதலமைச்சர் முக்க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னை வேளச்சேரி காந்தி சாலை பகுதியில் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2026 ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை நேர நடைபயிற்சியின்போது பொதுமக்களை நேரில் சந்தித்து "வாக்கிங் பிரசாரம்" (Morning Walk Campaign) மூலம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நடைபயிற்சியின் போது பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து கலந்துரையாடி வருகிறார். 

பல்வேறு மாவட்டங்களில் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்வதற்காக நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் ஒரு அரசியல் நிகழ்வாக மட்டுமல்லாமல், மக்கள் தொடர்பை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களிலும், புறநகர்ப்புறங்களிலும் நடைபெற்ற இந்த நடைபயணங்களில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நாடே அதிர அறிவித்த மு.க.ஸ்டாலின்... “கிழிச்சி எடுப்பேன்” - அதிமுக, பாஜகவுக்கு எதிராக அதிரடி சவால்...!

இந்தப் பிரசாரத்தின் போது, திமுக அரசின் சாதனைகள், குறிப்பாக பெண்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், கல்வி, சுகாதாரம், மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதேசமயம், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கப்பட்டது. நடைபயணத்தின் வழியே மக்களுடன் நேரடி உரையாடலை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், “நாம் செய்தது என்ன? இன்னும் செய்ய வேண்டியது என்ன?” போன்ற கருத்துக்களை மக்களிடம் கேட்டறிந்துவருகிறார். 

அதன் தொடர்ச்சியாக இன்று காலை, வேளச்சேரி காந்தி சாலையில் நடந்து சென்று காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானாவுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்து வருகிறார். சென்னையில் அதிகாலை முதலே முதலமைச்சர் தீவிர பரப்புரை மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் கண்டதும் உற்சாகமான மக்கள் ஆர்வத்துடன் கை குலுக்கியும், செல்ஃபி எடுத்துக்கொண்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷை ஆதரித்து கண்ணகி நகர், எழில் நகர் பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

இதையும் படிங்க: ராகுல் தமிழகம் வரும் போது இப்படியா?... சிறைபிடிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை... காங்கிரஸ் தலைவருக்கு ‘சோதனை’...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share