சட்டையை சுழற்றிய விஜய்... தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!
ரேஷன் கடைகளில் தவறுகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் முதற்கட்டமாக பதவியேற்றுள்ள 9 அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய், மக்களின் குறைகள், துறை ரீதியான தேவைகள், கடந்த ஆட்சியில் நிலுவையில் உள்ள மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பட்ஜெட் தயாரிக்கும் பணிக்கும் ஆயத்தமாவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஒவ்வொரு துறைகளுக்குமே தமிழ்நாடு முதலமைச்சர் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். உடனடியாக அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்களை நடத்த வேண்டும், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக துறை ரீதியில் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நியாயவிலை கடைகளில் கவனத்துடன் பணியாற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் மக்கள் பிரதிநிதிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நியாயவிலை கடைகளில் பொருட்கள் சரியாக கிடைப்பதை உறுதி செய்யவது, மின்னணு தராசு சரியாக வேலை செய்கிறதா என ஆய்வு செய்யப்படுகிறது. அனைத்து ரேஷன் கடைகளிலுமே மின்னணு தராசு கொண்டுவரப்பட்டிருக்கக்கூடிய நிலையில்வெயிட் ஸ்கேலிங் லெவலை பரிசோதிக்கும் பணிகளிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!
இந்த நிலையில் எடைய பொதுமக்கள் பார்க்கும் வகையில் இருபுறமும் டிஸ்பளே வேலை செய்கிறதா? என்பதை பணியாளர்கள் சரி பார்க்க உத்தரவு செய்யப்பட்டிருக்கிறது. நியாயவிலை கடைகளில் தவறுகள் கண்டறியப்பட்டால் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துறையிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நியாயவிலைக் கடை பணியாளர்கள் கவனமுடனும் விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!