COLDRIF மருந்து... மேலும் ஒரு உயிர்பலி... 4 வயது குழந்தை உயிரிழந்த சோகம்..!
கோல்ட்ரிப் மருந்து குடித்து கோமாவில் இருந்த 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய மிகப்பெரிய மருத்துவ பேரழிவுகளில் ஒன்றாக 'கோல்ட்ரிஃப்' இருமல் சிரப் தொடர்பான சம்பவம் அமைந்தது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பல குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சோகத்திற்கு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டது தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் சிரப்.செப்டம்பர் 2025 முதல் அக்டோபர் மாதம் வரை, ம.பி.யின் சிந்த்வாரா மாவட்டத்தில் முதலில் 6 குழந்தைகள் திடீரென உயிரிழந்தனர்.
பின்னர் இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. காய்ச்சல், இருமல், சளி போன்ற பொதுவான நோய்களுக்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி இந்த சிரப்பை கொடுத்தனர். ஆனால் மருந்து உட்கொண்ட சில மணி நேரங்களிலேயே குழந்தைகளுக்கு கடுமையான வாந்தி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரக செயலிழப்பு போன்ற அறிகுறிகள் தோன்றின. பலர் விரைவாகவே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா வரிக்குறைப்பு... வளர்ச்சியின் மைல்கல்..! நயினார் பெருமிதம்..!
முதலில் 11 என எண்ணிக்கை பதிவாகியது, பின்னர் 20, 22, 23 என்று உயர்ந்து இறுதியில் 24 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. சில குழந்தைகள் மாதக்கணக்கில் கோமாவில் இருந்து பின்னர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மேலும் ஒரு உயிர் பலி நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் 4 வயது குழந்தை கோல்ட்ரிப் மருந்து குடித்ததால் கோமாவிற்கு சென்றது. 4 மாதங்களாக கோமாவில் இருந்த குழந்தை நினைவு திரும்பாமலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படிங்க: கடன் தான் நாட்டின் வளர்ச்சியா? வாக்களித்த மக்களுக்கு துரோகம்... சீமான் தாக்கு..!