×
 

சைலன்ஸ்!! டெல்லியில் நடந்த காங்., சிறப்பு கூட்டம்!! மாநில தலைவர்களின் வாய்க்கு பூட்டு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடக்கும் மாநிலங்களின் காங்., தலைவர்களுடன், கட்சி, மேலிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத் தலைவர்களை பேச அனுமதி அளிக்காதது, அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) நடைபெறும் 12 மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லி மேலிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பெரும்பாலான மாநிலத் தலைவர்களை பேசவே அனுமதிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் கட்சியின் மாநிலத் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. “நேரில் வரவழைத்து பேசவிடாமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். வீடியோ கான்பரன்ஸ் நடத்தியிருந்தால்கூட இந்த அவமானம் வந்திருக்காது” என்று மாநில நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர்.

கூட்டத்தின் பின்னணி: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் நவம்பர் 4 முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியைத் தொடங்கியுள்ளது. 

இதையும் படிங்க: மெட்ரோ திட்ட நிராகரிப்பு..!! கோவையில் ஆர்ப்பாட்டத்தில் குதித்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி..!!

பீஹார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு இதே SIR பணியே முக்கியக் காரணம் என்று கட்சித் தலைமை கருதுகிறது. அடுத்த ஆண்டு தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் வர உள்ள நிலையில், இந்தப் பணியும் பூத் கமிட்டி நியமனமும் சரியாக நடக்கிறதா என்பதை ஆய்வு செய்யவே நேற்று முன்தினம் (நவம்பர் 18) டெல்லியில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் என்ன நடந்தது? காலை 11:30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட கூட்டம் 12:30 மணிக்குத்தான் தொடங்கியது. ஒன்றரை மணி நேரத்தில் முடிந்துவிட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பேசவில்லை. பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மூத்தத் தலைவர் முகுல் வாஸ்னிக் ஆகியோர்தான் பேசினர்.

பீஹார் தோல்வி குறித்து விளக்கம் அளித்த வேணுகோபால், “பீஹாரில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. அதனால்தான் நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை” என்று கூறினார். இதை கேட்ட மாநிலத் தலைவர்கள் பலரும் முணுமுணுத்தனர். “இது ஏற்க முடியாத காரணம்” என்று சலசலப்பு எழுந்தது.

பின்னர் ஒவ்வொரு மாநிலத்தின் பூத் கமிட்டி நியமன நிலையை ஆய்வு செய்தனர். கோவா மாநிலத் தலைவரை நேரடியாகக் கண்டித்தனர். தமிழ்நாடு குறித்து கேட்டபோது, “இதுவரை 24,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தமிழக பொறுப்பாளர்கள் தெரிவித்ததும், “இன்னும் வேகப்படுத்துங்கள்” என்று மட்டும் கூறி விட்டு விட்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, ராஜேஷ்குமார் ஆகியோர் “நம்மை எதுவும் கேட்டு தர்மசங்கடப்படுத்தவில்லையே” என்ற திருப்தியுடன் திரும்பினர்.

ஆனால் மற்ற மாநிலத் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். “எங்களை பேசவே விடவில்லை. பீஹார் தோல்விக்கு உண்மையான காரணங்களை பேசிவிடுவோமோ என்று பயந்துவிட்டார்கள் போல” என்று ஒரு மாநிலத் தலைவர் கோபமாகக் கூறினார்.

மாநில நிர்வாகிகள் கருத்து: கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
“நேரில் வரவழைத்து கூட்டம் நடத்தி, யாரையும் பேச விடாமல் திருப்பி அனுப்பியது அவமானம். வீடியோ கான்பரன்ஸ் நடத்தியிருந்தாலாவது பேசியிருக்கலாம். பீஹார் தோல்விக்கு உண்மையில் என்ன காரணம் என்பதை விவாதிக்கவே விடவில்லை. மேலிடம் தன் தவறுகளை மறைக்கிறது என்ற எண்ணம்தான் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது” என்று அவர்கள் 

இதையும் படிங்க: கரூரில் பரபரப்பு... "தலையில் மண்ணெய் ஊற்றி"... ஸ்பாட்டுக்கு ஓடி வந்த ஜோதிமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share