×
 

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தளவானூர் அணைக்கட்டு! 84 கோடியில் சீரமைக்க அரசாணை வெளியீடு

புயலால் சேதம் அடைந்த தளவானூர் அணைக்கட்டை சீரமைக்க 84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே விவசாயிகளின் 20 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று புதிதாக அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. 

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூ.25 கோடியே 35 லட்சம் அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு கட்டும் பணியை 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அணைக்கட்டானது 400 மீட்டர் நீளமும், 3.1. மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கொங்கரகொண்டான், திருப்பாச்சனூர், வெளியம்பாக்கம், சித்தாத்தூர்திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் ஆகிய 8 கிராமங்களும், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம், காவனூர், உளுந்தம்பட்டு, அவியனூர், கரும்பூர் ஆகிய 5 கிராமங்களும் என மொத்தம் 13 கிராமங்கள் மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 87 திறந்தவெளி கிணறுகள் இந்த அணைக்கட்டால் பயன்பெறும் வகையில் அணைக்கட்டு உருவாக்கப்பட்டது.

இந்த தடுப்பணையிலிருந்து வரும் நீர் குறைந்தது 2,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கனமழையைத் தொடர்ந்து அணையின் மதகு இடிந்து விழுந்தது. டிசம்பர் மாதம் 2024 ஆம் ஆண்டு புயலின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தளவானூர் அணைக்கட்டு உடைந்த நிலையில் அணைக்கட்டை சீரமைக்க 84 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. 

இதையும் படிங்க: சுகாதாரத் துறையில் மிளிரும் தமிழ்நாடு.. பெருமை பீத்திக்கொள்ளும் ஸ்டாலின்.. ஆனால் உண்மை என்ன..??

இதையும் படிங்க: தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.. காரணம் இதுதான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share